திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?

#சிறு+அம்பலம்= சிற்றம்பலம். சிறிய வெளி என்று பொருள். அம்பலம்- வெளி, ஆகாயம்.

#நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது.

அவ்வான்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் #ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன.

இதனை நம் போன்றோர் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோயில்புராணம் எடுத்துரைக்கின்றது.

அதாவது நாம் தான் அது,
அதுவே நாம் என்பதை உணர்த்துவதற்க்கே இந்த ஆனந்ததிருநடனம்.
அதாவது மனிதனின்
அகம் ஒரு கோயில்
உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

திருச்சிற்றம்பலம் என்றால் நம்முள் இருக்கும் ஆன்மாதான்.

பொதுவே தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும்,
#சீவனே #சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும் ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும் , முடிவிலும் இரு கைகூப்பி #திருச்சிற்றம்பலம் என்று கூறுவர்.

அதற்க்கு எதிர்புரம் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் கூறுவர்.

#இதற்க்கு என்ன பொருள் என்றால் உண்ணுள் இருக்கும் (பின்டத்தில் இருக்கும் உன் ஆன்மா அண்டத்தில் கரையட்டும்)உன் ஆன்மா சிற்றம்பலத்தில் இருக்கும் உன் ஆன்மா நிறைவு பெறுவதாக பரிபூரணமாவதாக என்று பொருள்

அதற்க்கு எதிரில் உள்ளவர் தில்லையம்பலம் என்று பதில் வணக்கம் சொல்லுவர்.

#உங்களை பார்த்து இனிமேல் யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் #ஆத்மா நிறைவுபெறட்டும் என்று அவர்கள் வாழ்த்துகிறாற்கள் என்று அர்த்தம் பதிலுக்கு தாங்களும் தில்லையம்பலம் என்று கூறவேண்டும்.

கூறுவதோடு நில்லாமல்

#தில்லையம்பலத்தில் உள்ள ஆனந்த கூத்தனை மனதால் தரிசிக்க வேண்டும்.
உருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக முக்தி.

இதனை உணர்த்தவே #திருசிற்றம்பலத்தில் #நடராஜ பெருமான் மனித ரூபத்தில் #ஆனந்தகூத்தாடுகிறான்.

#நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் .

மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் .

மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!

#சிதம்பரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை ; எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது . திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்

#இப்பதிவை படிக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் #திருச்சிற்றம்பல வணக்கம்

#திருச்சிற்றம்பலம் என்று சொல்ல சொல்ல நாம் அறியாமல் பார்க்கும் பேசும் செய்யும் அனைத்து பாவச்செயல்களும் நீங்கி நம் ஆன்மாவிற்கு புன்னியம் சேற்க்கிறோம்….. அப்போது அரியாமையால் ஏற்படும் தவறு எவ்வளவு என்பது நமக்கு தெரியாது

அதனால் நாம் #திருச்சிற்றம்பலம் என்று நித்தமும் எவ்வளவு முறை சொன்னாலும் போதாதல்லவா?

மேலும் திருச்சிற்றம்பலத்தை தரிசிக்க வாய்ப்பு கிடைக்காமலும் உணராமலும் பலர் வாழ்வு முடிந்து விடுகிறது ஆனால் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது சிவகதி அடைய வேண்டும் என்பதற்காக ஒரு ரஹசிய கோட் வேர்டாக இதை இறைவனே திருச்சிற்றம்பலமுடையான் என்று தன்பெயரை குறிப்பிட்டான்.

ஆணவம்

மயிலுக்கு இருப்பதைப் போன்ற அழகு மிகுந்த தோகை, வேறு எந்த பறவைக்கும் கிடையாது. யானையின் தந்தங்களைப் போல, வேறு எந்த விலங்குக்கும் அழகு மிகுந்த தந்தங்கள் இல்லை. ஹார்ஸ் பவர் என்று சொல்லப்படும் குதிரையின் ஓட்டத்திற்கு இணை உண்டா? இருந்தும், அவை எல்லாம் கர்வப்படுவதில்லை. ஆனால், அவற்றை எல்லாம் தன் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் மனிதனுக்கோ ஆணவம் கண்ணை மறைக்கிறது. பைரவரைச் சுற்றி, நான்கு நாய்கள் இருப்பதை படத்தில் பார்த்திருப்போம்.

பைரவரின் திருமேனி, அபூர்வமான அமைப்பு கொண்டது. அவரின் திருவடி முதல் இடுப்பு வரை, பிரம்மதேவரின் வடிவம்; இடுப்பு முதல் கழுத்து வரை, மகாவிஷ்ணுவின் வடிவம்; கழுத்து முதல் திருமுடி வரை, ருத்ர வடிவம். இவ்வாறு, மும்மூர்த்திகளின் வடிவாகத் திகழ்பவர், பைரவர். ஒருநாள், சிவபெருமானை தரிசிக்க, கைலாயம் வந்தார் பைரவர். வெளியில், தன் வாகனமான சுவானத்தை (நாயை), நிறுத்தி விட்டு, கைலாயத்திற்குள் பிரவேசித்து, சிவபெருமானை தரிசித்து திரும்பும் போது, சுவானத்தை காணவில்லை. பல இடங்கள் தேடியும் தென்படவில்லை.

வருத்தத்தோடு மறுபடியும் கைலாயநாதரை தரிசித்து, முக்கண் முதல்வரே… தங்கள் ஆணைப்படி, உலகெங்கும் வலம் வந்தேன்; தீயவர்களை தண்டித்தேன். இன்று, தங்களை தரிசித்து திரும்பிய போது, அடியேனின் வாகனத்தை காணவில்லை; எங்கு தேடியும் பலன் இல்லை. ஏன் இப்படி என்பது புரியவில்லை… என முறையிட்டார்.
பைரவா… உன் வாகனமான சுவானம், சாதாரண சுவானங்களில் ஒன்றல்ல; வேதமே அவ்வடிவில் உனக்கு வாகனமானது. இது உனக்குத் தெரிந்திருந்தும், ஆணவத்தில், அதை சாதாரண சுவானமாக நினைத்து விட்டாய்… அகங்கார வசப்பட்டோருக்கு வேதத்தின் பொருள் விளங்காது. அதன் காரணமாகவே, உன் வாகனம் மறைந்தது… என்றார். அதைக் கேட்டதும், பைரவர் நடுங்கி, பரம் பொருளே… அடியேன் அகங்கார வசப்பட்டதற்கு சரியான தண்டனை கிடைத்து விட்டது; மன்னித்து, அருள் புரியுங்கள்… என வேண்டினார். பைரவா… மதுரைக்கு வடமேற்கில், வாதவூர் எனும் தலத்திற்கு செல். அங்கு உன் துயரம் தீரும்… என்று அருள் பாலித்தார் சிவபெருமான்.

வாதவூர் என அழைக்கப் பட்ட திருவாதவூருக்கு புறப்பட்டார் பைரவர். இவ்வூருக்கு வேதபுரி என்ற பெயரும் உண்டு. இங்கு, தன் பெயரால் குளம் உண்டாக்கி, நீராடியவர், திருநீறு அணிந்து, ருத்ராட்ச மாலை சூடி, ஆலயத்திற்குள் புகுந்து, சிவனை பூஜித்தார்.
பெருமானே… பொல்லாத ஆணவத்தால், நான் பட்ட துன்பம் போதும். வேத மயமான வாகனத்தை இழந்த அடியேனின் துயரத்தை தீருங்கள்… என மனமுருகி வேண்டினார். அப்போது, மூல லிங்கத்தில் இருந்து நான்கு சுவானங்களுடன் வெளிப்பட்ட சிவபெருமான், பைரவா… வேத மயமான இந்நான்கு சுவானங்களையும் பெற்றுக் கொள்; இவை அனைத்து விதமான பேறுகளையும் தரும். உன்னால் உருவாக்கப்பட்ட பைரவ தீர்த்தத்தில் நீராடியவர்கள், எல்லா மங்கலங்களையும் அடைவர்…
என்று அருளி, மறைந்தார். அகங்காரம் நீங்கி, சிவபெருமானால் அருளப்பட்ட நான்கு சுவானங்களுடன் அங்கிருந்து புறப்பட்டார் பைரவர். மனிதன், ஒவ்வொரு படியாக முன்னேற முன்னேற, அவனை அறியாமலே, ஆணவம் தலையெடுக்கும். சிறிதளவு ஏமாந்தால் கூடப் போதும். நம் முன்னேற்றத்திற்கு காரணமானவை, நம்மிடம் இருந்து மறைந்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்!

இறைவழிபாட்டால் ஏற்படும் இழப்புகள்!

ஆயிரம் கிரணங்கள் நீட்டி
அணைக்கின்ற ஆதவா போற்றி!
ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!

‘‘தினமும் இறைவனுக்கு பூஜை செய்கிறீர்களே, அதனால் என்னென்ன லாபங்களை நீங்கள் பெற்றீர்கள்?’’ ‘‘உண்மையில் சொல்லப்போனால் நான் நிறைய இழந்திருக்கிறேன்.’’ ‘‘இழப்புகள்தான் அதிகமா? அப்படியானால் ஏன் தொடர்ந்து இறைவழிபாடு செய்துகொண்டிருக்கிறீர்கள்? ஆனால், நீங்கள் இழந்ததாகச் சொல்லும்போது உங்கள் குரலிலும், முகத்திலும் வருத்தமே இல்லையே! அத்தனை ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையா?’’

‘‘உண்மைதான். நான் இழந்தவை என்னென்ன தெரியுமா? முதலில் என் கோபம். அடுத்ததாக என் பொறாமை, எனக்குள்ளிருந்த வன்மம், சுயநலம் எல்லாம்தான்…’’
‘‘வந்து… நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?’’‘‘ஆமாம், இறைவழிபாட்டின்போது யார்மீதும் கோபம் எழுவதில்லை;  பொறாமைப்படுவதில்லை; எந்தப் பகையும் எனக்குள் நிழலாடுவதில்லை; ‘நான், எனது’ என்ற என் சுயநல எண்ணங்கள் தலை தூக்குவதேயில்லை…’’

‘‘சரி, இறைவழிபாடு முடிந்த பிறகு?’’‘‘உண்மைதான். நான் யதார்த்தத்துக்கு வந்துவிடுகிறேன். எனக்குள் பூஜையின்போது தோன்றாத தீய எண்ணங்கள் தலைதூக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதற்காகவே ஒரு பயிற்சி முறையாக நான் அடுத்த நாள் இறைவழிபாட்டு நேரத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருப்பேன்.’’‘‘அதாவது, இறைவழிபாட்டு நேரத்தில் மட்டும் உங்கள் தீய குணங்களை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள்?’’
‘‘அப்படித்தான். ஆனால், தினமும் பூஜையும் அந்த நேரத்தில் என்னை சுத்தப்படுத்திக்கொள்வதுமான பழக்கமும் அழுத்தமாக எனக்குள் விதைக்கப்பட்டுவிடுகின்றன. இதனாலேயே பிற நேரங்களிலும் அந்த தீய எண்ணங்கள் என்னுள் உருவாகும்போது என்னையே நான் வித்தியாசமாக நோக்குவேன்.

கோபத்தை இழந்த பிறகு, எனக்கு நண்பர்கள் நெருக்கமானார்கள்; பொறாமையை இழந்தபோது என்மீது அக்கறை கொள்பவர்கள் அதிகமானர்கள்; வன்மம், சுயநல உணர்வை இழந்த பிறகு எனக்கு சமூகத்தில் நன்மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதாவது, நான் இழந்தவை மூலமாக அந்தக் கடவுளே பல லாபங்களை எனக்கு ஆசீர்வதித்திருக்கிறார்…’’‘‘தினசரி இறைவழிபாட்டால் நன்மைகள்தான் அதிகம் போலிருக்கிறதே!’’

‘‘உண்மைதான். எது இல்லாவிட்டாலும் மனம் அமைதியாகும். அலைபாய்வதிலிருந்து விடுபடும். எல்லோரிடமும் அன்பு பாராட்ட முடியும்; எந்த விஷயத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்; சரியான நடவடிக்கையை எடுக்க முடியும்-குறிப்பாக அடுத்தவரை பாதிக்காமல்!’’‘‘இனிமேல் நானும் இறைவழிபாட்டில் தினமும் சில நிமிடங்கள் செலவிடப்போகிறேன்; சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் வெகுமதியாகப் பெறப் போகிறேன்!’’

நோய்கள் விலகவும் – நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திரி மந்திரம்

தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறார். திருப்பாற்கடலைக் கடையும்பொழுது அமிர்த கலசத்துடன் வந்தவர். கீழ்க்குறிப்பிட்ட அவருடைய மந்திரத்தை தினமும் காலை, மாலை வேளைகளில் பக்தியுடன் கூறிவந்தால் கொடிய நோய்கள் விலகும். நோயற்ற வாழ்வு கிட்டும். மேலும் மருத்துவமனைகளில் தன்வந்திரி படத்தை வைத்து இந்த மந்திரத்தையும் அதன்கீழ் எழுதி வழிபட்டால் அந்த மருத்துவமனை பிரபல்யமடையவும். தன்வந்திரியின் அருள் கிட்டும்.

ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே
ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப
ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா

தன்வந்திரி ஸ்லோகம்

சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

மரண பயம் நீங்க ஸ்ரீ ருத்ரம்

நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய மஹாதேவாய த்ரயம்பகாய – த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:

தன்வந்திரி மந்திரம்

கார்த்திகை தீபத் திருநாள்

கார்த்திகை தீபப் பெருநாள் அன்றுதான் திருவண்ணாமலை திருத்தலத்தில் இறைவன் இறைவிக்கு இடப்பாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆகக் காட்சி அளித்தான்.
அந்த நன்னாளில் மலைவலம் வருவது மகத்தான புண்ணியத்தைத் தரும்.
குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலம் அனைத்துப் பாவங்களையும் போக்கி மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது.
கிரிவலம் பற்றிய தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போம் !

மலையின் பெருமை :-
இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது.
சீல முனிவோர்கள் செறியு மலை..
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..
ஞான நெறி காட்டு மலை..
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை..
– என்றெல்லாம் அண்ணாமலை வெண்பாவில் குரு நமசியாவர் இம்மலையைப் போற்றுகிறார்.
கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கிரிவலம் :-

இம்மலையின் சுற்றளவு 14 கி.மீ. கிரிவலத்தை எங்காவது துவங்கி, எப்படியாவது முடித்தல் கூடாது. அதன் பெயர் கிரிவலமும் அல்ல. முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் பூத நாராயணரிடம் மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிக் கொள்ள வேண்டும்.
அவர் தான் இம்மலையைக் காவல் காக்கிறார்.
அதன் பின் விக்னங்கள் ஏதும் இல்லாமல் சிறப்பாய் மலை வலம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தல் வேண்டும்.
அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை வலத்தை ஆரம்பிக்க வேண்டும்.
மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்கிக் கொள்வதற்காக வழிபட்ட அஷ்டதிக்கு பாலகர்களில், கிழக்கிற்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை முதலில் வழிபடவேண்டும்.
மலை சுற்றும் சாலையில் உள்ள நந்திகேசுவரர் சன்னதியை வணங்கி வழிபட்டு பின்னர் தான் மலைவலம் வர வேண்டும்.
தென்கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது. இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது.
வழியில் உள்ள சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் மகத்தான மந்திர சக்தி வாய்ந்தது. கேட்ட வரத்தைத் தர வல்லது. இங்கு கிட்டத்தட்ட 22க்கு மேற்பட்ட மகான்கள் ஜீவ சமாதியில் உள்ளனர். வழிபடுதல் சிறப்பு. தொடர்ந்து ரமணாஸ்ரமம் ஆன்ம அமைதியைத் தர வல்லது. சற்றுத் தொலைவில் விசிறி சாமியார் ஆசிரமம் அமைந்துள்ளது. மன அமைதியைத் தர வல்லது.

தியானம்‬ செய்ய ஏற்ற இடம் அது.

அடுத்து வழியில் தெற்கு திசைக்கு அதிபதியான எமன் பூஜை செய்து வழிப்பட்ட எமலிங்கம் உள்ளது. எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்பது நம்பிக்கை.
அடுத்து தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி, சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது.
இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை தரிசிக்க வேண்டும். இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம் ஆகும்.
ஆதலால் இங்கு மலையின் முகப்பில் தெரியும் நந்தியின் தலையை வணங்கிச் செல்ல வேண்டும். அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு. இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. அதனை வழிபட வேண்டும். வழியில் அடிமுடி சித்தர் ஜீவ சமாதி இருக்கும். இங்கு தியானம் செய்தால் மகத்தான புண்ணிய பலன்கள் கிடைக்கும்.
அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட வருண லிங்கம் ஆகியவை உள்ளது. அதனை வழிபட்ட பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது.
இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். இங்கு அவசியம் தரிசனம் செய்தல் வேண்டும். இது மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய இடம். இவ்வாலயம் செல்லும் வழியில் மாணிக்கவாசகரின் ஆலயம் உள்ளது.
அதற்கடுத்து வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயுலிங்கம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேர லிங்கம் காணப்படும்.
அடுத்து இடுக்குப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக்கூடியது. இதனை பஞ்ச முக தரிசனம் என்பர். அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது.
இதனையும் வழிபட்டு, வழியில் உள்ள ஈசான்ய மடத்தில் ஜீவ சமாதியாக உள்ள ஈசான்ய ஞான தேசிகரையும் வணங்க வேண்டும். அதனை அடுத்து எதிரே ஒரு சிறிய விருஷபாரூடர் சன்னதி இருக்கும். அதை அவசியம் வணங்க வேண்டும். ஏன் என்றால் அந்த இடத்தில்தான் உமையம்மைக்கு சிவன் காட்சி அளித்து இடப்பாகம் தந்தருளினான்.
ஆதலால் அதையும் தரிசித்தல் மிக மிக முக்கியமானது. அதன் பிறகு மீண்டும் பூதநாராயணர் ஆலயம் அடைந்து அவருக்கு நன்றி கூறி, தீபம் ஏற்றி வழிபட்டு, வழித்துணையாக விக்னங்கள் இல்லாமல் காத்த இரட்டைப் பிள்ளையாரையும் வணங்கி வழிபட்டு, பின் அருணாசலேஸ்வரர் ஆலயம் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் முழுமையாகப் பூரணத்துவம் அடைகிறது.

கிரிவலம் செல்லும் முறை :-

நடந்துதான் செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். இடப்புறமாகவே நடந்து செல்ல வேண்டும். மலை சுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்கக் கூடாது. நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்து செல்லல் வேண்டும். அங்கும் ஆடிக் கொண்டும், பாடி, ஓடிக் கொண்டும் செல்லக் கூடாது. அமைதியாலவே செல்ல வேண்டும்.

மலை வலம் வர உகந்த நாட்கள் :-

எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களே ! . இருந்த போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பௌர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களும் ஆகும். ஏகாதசி, நீத்தார் நினைவு நாள்களிலும் கிரிவலம் வரலாம். அமாவாசை, பிறந்த நாள், திருமண நாள், பிரதோஷம், சிவராத்திரி போன்ற புண்ணிய தினங்களிலும் மலை வலம் வரலாம்.

கிரிவல மகிமை :-

புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் தன் பரிவாரங்களூடன் மலையை வலம் வந்தார். அப்போது சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர். இன்றும் சூட்சும ரீதியாக வந்து கொண்டிருக்கின்றனர்.
சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன்.
பௌர்ணமியன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் கிரகித்து பூர்ண நிலவாக, அதிகக் கலைகள் கொண்டவனாக சந்திரன் விளங்குகிறான். இதனால் பௌர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது.
சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். சோமவாரம், சோமப் பிரதிஷணம் போன்றவற்றின் மூலம் நாம் இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம்.
ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை. அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்தக் கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கின்றது. செவ்வாய் கிழமை அன்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. சத்குரு சேஷாத்ரி சுவாமிகளும் செவ்வாயன்று மலை வலம் வருதலை மிகச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

பலன்கள் :-

ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும்.
‘அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!’ -என்கிறது தேவாரமும்.
மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜ சூர்ய யாகம் செய்த பலன் கிடைக்கும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும். மலையைப் பற்றியும், மலை சுற்றுவதைப் பற்றியும் நினைப்பவர்களுக்கே இந்தப் பலன் என்றால், மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்…??? அவர்கள், கைலாசத்திற்குள் நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி, மோட்சமாகிய உயர் பதவியை அடைவார்கள் என்று அருணாசல புராணம் தெரிவிக்கின்றது.
* ஞாயிற்றுக் கிழமை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்.
*திங்கட்கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.
*செவ்வாய்க்கிழமை சுற்றினால் கடன்,வறுமை நீங்கும்.
*புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சி, முக்தி கிடைக்கும்.
*வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளாவார்கள்.
*வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்.
*சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரக தோஷம் நீங்கும்.
நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில் கணவனும், மனைவியும் நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும். கர்ம வினைகள் அனைத்தும் தொலையும். அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும். மனம் நிம்மதி அடையும். பாவங்கள் அனைத்தும் நீங்கும். பித்ரு தோஷங்கள் நிவர்த்தியாகும்.
ஆகவே, மலை வலம் வருவோம். மன நலம் பெறுவோம்.
அருணாசல அருணாசல அருணாசல…