பெருமாளின் அவதாரங்கள்

1. மச்ச அவதாரம்
மச்ச அவதாரம் திருமாலின் முதல் அவதாரமாகும். மச்சம் என்ற சமஸ்கிருத சொல், தமிழ் மொழியில் மீன் எனப்பொருள் தரும். இந்த அவதாரத்தில் திருமால் நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.
2. கூர்ம அவதாரம்
கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி திருமால் எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).
3. வராக அவதாரம்
வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.
4. நரசிம்ம அவதாரம்
நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடம்போடும் தோற்றமளிக்கிறது.பல வைஷ்ணவர்கர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்கதருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.
5. வாமண அவதாரம்
வாமண அவதாரம் காசிபன், அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து, மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து தானம் கேட்டு திருமால் வதை செய்வது வாமன அவதாரம்
6. பரசுராம அவதாரம்
பரசுராம அவதாரம் ஜமத்கினி முனிவருக்கும், ரேணுகைகும் மகனாகப் பிறந்து, பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைப் பூண்டோடு அழிக்க முற்பட்ட அவதாரம் இது.
7. ராம அவதாரம்
வாழ்வின் அறநெறிமுறைகளை எடுத்து காட்டும் அவதாரம் ராம அவதாரம்
8. பலராம அவதாரம்
ஸ்ரீ கிருஷ்ணரின் தமையன் ஆக தோன்றிய அவதாரம் பலராம அவதாரம்
9. கிருஷ்ண அவதாரம்
பாரதப்போர் நடத்தி , தர்மத்தின் வாழ்வுதனை சூத்து கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும் எனக் காட்டிய அவதாரம் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்
10. கல்கி அவதாரம்
கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *