இறைவன் : வெட்டுடையார் அய்யனார்

இறைவி : வெட்டுடையார் காளியம்மன்

தலவிருட்சம் : ஈச்சமரம்

ஆகமம் : கார்ண

தீர்த்தம் : சுவாதி

அமைவிடம்:

இத்திருக்கோயில் சிவகங்கையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

வரலாறு:

ஈச்சங்காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டவர் அய்யனார். அவருக்கென்று நிலைபெற்ற காளி வெட்டுடைய காளி என்று காலங் காலமாக அழைக்கப்படுகிறார். மக்கள் தங்கள் குறைகளைக் களைய காசு வெட்டிப்போட்டு நிவர்த்தி தேடிக்கொள்வதால் பிரார்த்தனைத் தலமாகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

சிவகங்கையை ஆண்ட இராணி வேலுநாச்சியார் அவர்கள், தான் அணிந்த வைரத் திருமாங்கல்யத்தை வெட்டுடையாளுக்கு காணிக்கையாக்கினார் என்று வரலாறும் இக்கோயிலுக்கு உண்டு.

திருக்கோயில் திறந்திருக்கும் நேரம்:

தினசரி காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும்.

திருக்கோயில் நடை சாத்துதல் கிடையாது.

கால பூஜைகள்:

இத்திருக்கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.

  1. விழா பூஜை காலை 6.45 மணிக்கு.
  2. காலசந்திகாலை 8.00 மணிக்கு.
  3. உச்சிகாலம் பகல் 12.00 மணிக்கு.
  4. சாயரட்சை மாலை 6.00 மணிக்கு.

முக்கிய திருவிழாக்கள்:

இத்தலத்தில் அமைந்துள்ள காளிகாம்பிகைக்கு ஒவ்வொறு ஆண்டும் பங்குனி மாதம் சுவாதிப் பெருந்திருவிழா 12 நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்பதாம் நாள் திருத்தேர் உற்சவம் நடைபெற்று வருகிறது.

திருக்கோயிலுக்குச் செல்லும் வழித்தடம்:

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் கொல்லங்குடி உள்ளது. மதுரை – தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கொல்லங்குடி தெற்கே 2 கி.மீ தூரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து தூரம்:

சிவகங்கை பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீதூரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *