அமைவிடம்
கடலூர் நகரிலிருந்து சிதம்பரம் செல்லும் பிரதான சாலையில் செல்லங்குப்பம் கிராமத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
 
இறைவன் பெயர்
அருள்மிகு அற்புத விநாயகர்
வரலாற்றுச் சிறப்பு
இவ்வாலயம் 18ம்நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் கடலூரில் செயின்ட் ஜார்ஜ்கோட்டையைக் கட்டுவதற்காக வந்தபோது முதலியார் வகுப்பைச் சேர்ந்த செவ்வண்ண மேஸ்திரி, சரவண மேஸ்திரி என்பவர்கள் இங்கு வந்து குடியேறச்செய்து அவர்கள் மூலம் அக்கோட்டை கட்டப்பட்டதாகவும் அதற்குக் காரணமாகப் பல ஏக்கர் நிலங்கள் மேற்படி கிராமத்தில் வழங்கப்பட்டதாகவும், அவற்றிலிருந்து அற்புத
விநாயகர் கோயில் புதுப்பிக்கப் பட்டதாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நகரத்தார் என்று அழைக் கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு பாடலேஸ்வரர் திருக்கோயில் திருப்பணி செய்தபோது இத்திருக்கோயிலின் முன் மண்டபத்தைக் கருங்கல்லால் கட்டினார்கள் என்று கூறப்படுகிறது. வடலூர் வள்ளலா
ர் இராமலிங்க அடிகளார் கடலூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை சந்தித்தபோது வழக்கு நடைபெறும் நாள்களில் வடலூரிலிருந்து கடலூர் நடந்தே வருவார் என்றும், வரும் வழியில் இத்திருக்கோயிலை வலம் வந்து விநாயகப் பெருமானைத் தரிசித்துப்பாடிச்செல்வார் என்றும், வரலாறு கூறுகிறது.
 
திருவிழாக்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழா, வைகாசி வசந்த உற்சவம் 11நாட்கள் இத்திருக்கோயிலின் திருவிழாக்களாகும்.
 
அலுவலக முகவரி
செயல் அலுவலர் அருள்மிகு அற்புத விநாயகர் திருக்கோயில், ராஜாமுதலி சாவடி, கடலூர்.

 

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *