(வசிஷ்ட மாமுனிவர் வழிபட்ட தலம்)
 
திருக்கோயில் அமைவிடம்
விருத்தாசலம் – தொழுதுார் செல்லும் பாதையில் விருத்தாசலத்திலிருந்து 33 கி.மீ. தொலைவில் திட்டக்குடி எனும் நகரில் அமையப்பெற்றுள்ளது.
 
இறைவன் பெயர்
அருள்மிகு வைத்தியநாதன்
 
இறைவி பெயர்
அருள்மிகு அசலாம்பிகை
 
தல விருட்சம்
நெல்லிமரம்
 
தீர்த்தம்
கிருபாசமுத்திரம்
தல சிறப்பு
உலகம் யாவையும் படைத்தருளும் பிரம்ம தேவரின் மைந்தர் வசிஷ்ட மாமுனிவர். இவர் சிவபெருமானிடம் உபதேசம் பெற்று அசலாம்பிகை உடனுறை பூரீ வைத்தியநாதனை வழிபட்டதால் இத்தலம் திருவதிட்டக்குடி என்ற பெயர் பெற்றது. இது நாளடைவில் மருவி திட்டக்குடி என அழைக்கப்படுகிறது.
திருக்கைலைக்கு ஒப்பான திட்டக்குடி. வசிஷ்டம், கவுரபம், அசனாரணியம், பாபநாசம், இத்தலத்தில் பிரமன் நிறுவிய பிரமலிங்கம், அருள் தந்த வைத்தியலிங்கம், திருமால் தோன்றியதால் பெருமாளுக்கு தனிக்கோயில். மனு மன்னன் நிறுவிய மனுலிங்கம், இறைவன் அசரீரிப்படியே வசிஷ்டன் நிறுவிய பஞ்ச லட்சணமுடைய வசிஷ்டலிங்கம் முதலிய சிவலிங்கத் திருமேனிகளும், வசிஷ்டனே நிறுவிய கணபதி, முருகன், துர்கா சப்தமாதா, பத்ரகாளியம்மன், பள்ளி கொண்ட பெருமாள், சுகாசனப்பெருமாள் முதலிய பல மூர்த்திகளும் அமையப் பெற்றுள்ளன.
இங்கு வசிஷ்டரால் சிருஷ்டிக்கப்பெற்ற நானூறு பெண்களுடன் உமையவளும் நானூற்று ஒன்றாக தோன்றி வளர்ந்து வந்தாள். 400 மணமகன்களைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்விக்க நானுாற்று ஒன்றாக தோன்றிய உமையவளுக்கு தக்க வரன் கிடைக்காமல் வசிஷ்டர் வருந்திய
போது, பூரீ வைத்தியநாதரே மணவாளனாகத் தோன்றி உமையவளை மணந்து கொண்டார். அப்போது ஒரே நேரத்தில் 401
திருமணங்கள் நடந்த தலம் இது. இதன் உண்மையை இத்தலத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள நானுாற்றொருவர் ஆலயம் உறுதிப்படுத்துகிறது. வசிஷ்டர் சாபமிட்டதால் காகங்கள் இத்தலத்தில் இரவில் தங்குவது இல்லை என்பது மிகவும் சிறப்பம்சமாகும்.
 
இத்தகைய அருள் சக்தி வாய்ந்த இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 1, 2, 3, பங்குனி மாதம் 9, 10, 11 ஆகிய ஆறு நாட்களும் சூரியன் லிங்கத்தின் மீது சூரிய பூஜை செய்வது இன்றளவிலும் நடைபெறும் அற்புத நிகழ்ச்சியாகும்.
 
திருவிழாக்கள்
ஆடிப்பூர திருக்கல்யாணம், திருக்கார்த்திகை தீபம்,
அன்னாபிஷேகம், பெளர்ணமி பூஜை, பங்குனி உத்திரத் திருவிழா
போன்ற விழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.
 
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை 6.00 மணிமுதல் மதியம் 12 மணிவரையில் மாலையில் 4.00 மணிமுதல் இரவு 8 மணிவரை
 
அலுவலக முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில்,
திட்டக்குடி மின்னஞ்சல் முகவரி

 

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *