புராண பெயர்(கள்): திருவலிதாயம்
பெயர்: திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில்
மூலவர்: திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார்
தாயார்: ஜெகதாம்பிகை
உற்சவர் தாயார்: பரத்வாஜ் தீர்த்தம்
தல விருட்சம்: பாதிரி, கொன்றை
ஆகமம்: காமீகம்
சிறப்பு திருவிழாக்கள்: சித்திரையில் பிரம்மோற்ஸவம், தை கிருத்திகை, குரு பெயர்ச்சி.
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்

திருவலிதாயம் – பாடி வல்லீஸ்வரசுவாமி கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். சென்னை மாவட்டத்தில் ஆவடி செல்லும் சாலையில் பாடி லூகாஸ் டிவிஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள சாலை வழியாகச் சென்று இக்கோவிலை அடையலாம். இராமர், ஆஞ்சனேயர், சூரியன், சந்திரன் முதலானோர் இறைவனை வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை. இத்தலத்தின் மூலவர் திருவல்லீஸ்வரர் என்றும் திருவலிதமுடையநாயனார் என்றும் அழைக்கப்பெறுகிறார். தாயார் ஜெகதாம்பிகை ஆவார். பரத்வாஜ் தீர்த்தம் இத்தல தீர்த்தமாகவும், பாதிரி மற்றும் கொன்றை மரம் தலமரமாகவும் அறியப்பெறுகிறது.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *