அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 200 கி.மீ., விருத்தாசலம் சென்று அங்கிருந்து தொழுதூர் செல்லும் சாலையில் 22 கி. மீ. சென்றால் கொடிகளம் என்னும் ஊர் வரும். அங்கிருந்து இடப்பக்கம் பிரியும் சாலையில் 1 கி.மீ. செல்லவேண்டும். சென்னையிலிருந்து 243 கி.மீ. திருச்சியிலிருந்து 145 கி.மீ. மதுரையிலிருந்து 270 கி.மீ.
வரிசை எண் : 33
சிறப்பு : திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துக் குடையும், முத்துச்சிவிகையும் அளித்த தலம். நிவா நதிக்கரையில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்பு. நந்தியின் தலை திரும்பியிருக்கும். இத்தலத்துக்கு அருகில் (1கி.மீ) மாறன்பாடி என்ற ஊர் உள்ளது. திருஞானசம்பந்தர் இந்தத் தலத்தில் இரவு தங்கிவிட்டு மறுநாள் திருஅரத்துறை வந்தார். இங்கே ஒரு கோயிலும் உள்ளது.
இறைவன் : தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர்
இறைவி : திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி
தலமரம் : ஆலமரம்
தீர்த்தம் : நிவாநதி
பாடல் : அப்பர், சம்பந்தர், சுந்தரர
முகவரி : அருள்மிகு. அரத்துறைநாதர் திருக்கோயில், திருவட்டுறை & அஞ்சல், திட்டக்குடி வட்டம், (வழி) விருத்தாசலம், கடலூர் மாவட்டம் – 606 111
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 11.30 ; மாலை 04.00 – 08.00

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *