திருக்கோயில் அமைவிடம்
கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து தென்மேற்கே 26 கி.மீ. தூரத்தில் உள்ளது காட்டுமன்னார்கோயில். இதிலிருந்து கிழக்கே 2 கி.மீ. தூரத்தில் புண்ணிய சிவத்தலமான திருமூலஸ்தானம் அமைந்துள்ளது. மிக மிக அருகாமையில் திருநாரையூர், சதுர்வேதமங்கலம்,கானாட்டுமுள்ளுர் உள்ளன.
தலத்தின் வரலாறு
திருமந்திரம் படைத்த திருமூலர் சிதம்பரம்,
திருவிடைமருதூர் செல்லும் வழியில் இந்தத் தலத்தில் பலகாலம் தங்கி, இங்கு உறைந்துள்ள சிவபெருமானை வணங்கியுள்ளார்.
திருமூலர் வணங்கியதால் இந்த சிவனாருக்கு திருமூலநாதர் எனப் பெயராயிற்று.
 
தலத்தின் சிறப்பு
இங்குள்ள திருமூலநாதர் நோய் தீர்க்கும் ஆண்டவனாக உள்ளார். 3 முழ அளவே உள்ள சிவலிங்கத் திருமேனி ஆகம முறைப்படி நோய் தீர்க்கவே அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
 
சனிதோஷம் நீங்கும்
இங்கு சனிஸ்வரன் விநாயகரைப் பிடிக்க வரும்போது, விநாயகப்பெருமான் தெற்கு முகமாக அமர, அது முடியாமல் போகவே சனிஸ்வரனும் அருகில் அமர்ந்து காட்சியளிப்பதால், இருவரையும் ஒன்றுசேர்த்து வணங்கும் பேறு இத்தலத்தை வணங்குவோர்க்குக் கிடைப்பது இத்தலத்திற்கே உண்டு. இதனால் இங்கு வந்து வணங்குவோரின் தோஷங்கள் யாவும் பணிபோல் நீங்குகிறது. இதனால் இத்தலம் “சின்ன திருநள்ளாறு” எனச் சிறப்பும் பெற்றுள்ளது.
 
சூரியஒளி சிவலிங்கத்தின் மீது விழும்ஆண்டின் சித்திரை முதல் வாரத்தில் சூரிய ஒளி அதிகாலையில் சிவலிங்கத் திருமேனியின் மீது விழுவதைக் காண்பது நாம் பிறந்த பயனாகும். எனவே, சூரியனும் திருமூலநாதரை வணங்கும் தலமாக இது அமைந்துள்ளது.
 
மற்ற பிறச்சிறப்புகள்
அழித் த தா ல் இ ங் கு ள் ள விநாயகப்பெருமானுக்கு ‘கொடுங்கோல் ஒழித்த கணபதி எனப் பெயர் உண்டு. மேலும், இங்குதான் விநாயகப்பெருமான் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். முப்பெரும் தேவியர்களான,துர்க்கை,இலக்குமி, சரஸ்வதி ஆகியோர் சேர்ந்து இன்னல்களைத் தீர்க்க திருமூலநாதரை வணங்குகின்ற தலம் திருமூலஸ்தானமாகும்.
 
திருமூலர் ஏகநாதனை வணங்குவது போன்றதொரு புடைப்புச் சிற்பம் இத்திருக்கோயிலின் தெற்கு வெளிப்புறச் சுவற்றில் வடிக்கப்பட்டுள்ளது.
இதுவே திருமூலர் இங்கு தங்கி வணங்கி வாழ்ந்தார்
என்பதற்குச் சான்றாக அமைந்து உள்ளது.
கல்வெட்டுகளும் வரலாறும்
 
இருபதுக்கும் மேற்பட்டக் கல்வெட்டுகள் கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் வடக்கிலும் தெற்கிலும் கிரந்த எழுத்துக்களால் அமைந்துள்ளன.
கி.பி. 710-ஆம் ஆண்டு பழையாறையைத் தலைநகரமாகக் கொண்டநுசசோழன்’ என்பவன் இக்கோயிலைக் கட்டியுள்ளான். இவன் மனைவி சசது கவியேரை என்பவள் ஆவாள். ஏகநாதன் எனத் திருமூலநாதருக்கு மற்றும் ஒரு பெயருண்டு.
இக்கோயில் கட்டிமுடித்து இன்றைக்கு 1288 ஆண்டுகள் ஆகியுள்ளன. இக்கோயில் கொகுடிக் கோயில் வகையைச் சேர்ந்தது. இது ஒரு கற்றளி கோயிலாகும்.
கட்டிடமும் சிற்பங்களும்
முற்கால சோழர்களின் கட்டிடக்கலைக்கு இங்குள்ள விநாயகப் பெருமான் தனிக்கோயில் ஒர் எடுத்துக்காட்டு மிக வழுவழுப்பான சிற்பங்கள் யாவும் 7-ஆம் நூற்றாண்டு படைப்பின் இனியவையாகும்.
 
பூஜைகள்
நான்கு கால பூஜைகள் தவறாது சைவச்சிவாச்சாரியார்களால் முறைப்படிநாளும் நடந்தேறிவருகின்றன.
 

 

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *