அமைவிடம்
சிதம்பரம் நகரில் வடக்கு வீதியில் உள்ள கஞ்சித்தொட்டி என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இத்திருக்கோயிலை அடையலாம்.
சிதம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 1 கி.மீதொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
 
இறைவி பெயர்
தில்லையம்மன்,தில்லைகாளியம்மன்
தல வரலாறு
இத்திருக்கோயில் சுமார் 725 ஆண்டுகளுக்கு முன் கோப்பெருஞ்சிங்கன் என்ற சோழமன்னனால் கட்டப்பட்டுள்ளது.
 
சிவம் பெரியதா, சக்தி பெரியதா என்ற விவாதம் கைலையங்கிரியில் சிவனுக்கும் சக்திக்கும் இடையே ஏற்பட்டது. சிவமும் சக்தியும் ஒன்றே என்ற உண்மையை உலகிற்கு
உணர்த்தவும், பார்வதி தேவியின் கர்வத்தை அடக்கவும் சிவபெருமான் பார்வதிதேவியை, காளியாக மாறுமாறு சபித்துவிடுகிறார்.
– பார்வதி தேவியார் சி த ம் ப ர ம் தில்லைவனத்தில் வ ந் து தங்கிவிடுகிறார். வனத்தில் தங்கி இ ரு ந் து முனிவர்களுக்கும் , தேவர்களுக்கும் தீங்கு செய்யத் தொடங்கினாள். ஆ ன ந் த த் தாண்டவம் புரியும் ஈசனையும் ஆடல் போட்டிக்கு அழைத்தாள்.
ஈசனும் காளியும் ஆடிக்கொண்டு இருந்தனர். ஈசன் தனது காதில்
அணிந்திருந்த குண்டலத்தைக் கீழே விழச்செய்து விழுந்த அக் குண்டலத்தைக் காலினாலே எடுத்து காதில் பொருத்திக்கொண்டார். இத்தாண்டவத்திற்கு ஊர்த்துவ தாண்டவம் என்று பெயர். காளிதேவி பெண் என்பதால் நாணமுற்று ஈசனைப் போன்று ஊர்த்துவ தாண்டவம் ஆட மறுக்கிறாள். தில்லையின் எல்லைக்கு சென்று கிழக்கு நோக்கி அமர்ந்தாள். தேவர்களும், முனிவர்களும் வேண்டிக்கொண்டதற்கு இணங்க சினம் நீங்கி நான்கு முகம் கொண்ட பிரம்ம சாமுண்டீஸ்வரியாக உருக்கொண்டு தில்லை அம்மன் ஆனாள். இறைவனுடன் சிவகாமியாக இணைந்து காளியின் சாபம் நீங்கப்பெற்றார். இவ்வாறாக தீயவைகளை அழிக்கும் கோப சக்தியாக தில்லைகாளியும் நல்லவைகளை அருளும் சாந்த சொரூபினியாக
தில்லையம்மனும் ஆக இருவடிவமாக இத்திருக்கோயில் இருந்து அருளாட்சிபுரிகிறார்.
பிரார்த்தனை
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையில் ராகு கால பூஜையில் இக்காளியை வழிபட்டால் நாகதோஷம் நீங்கி திருமணத்தடை அகலும் என்பது ஐதீகம்.
 
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை 6.00 மணிமுதல் மதியம் 12 மணிவரையில் மாலையில் 400 மணிமுதல் 8 மணிவரை
 
அலுவலக தொடர்பு முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோயில்,
சிதம்பரம், கடலூர் மாவட்டம் – 608001
 

 

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *