திருக்கோயில் அமைவிடம்
இத்திருத்தலம் கடலூர் மாவட்டத்தின் தென்மேற்கே நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் பெயர்
அருள்மிகு சிவசுப்ரமணியர்
 
இறைவி பெயர்
அருள்மிகு வள்ளிதேவசேனா
பூஜை காலங்கள்
தினசரிநான்கு கால பூஜைகள் தலச் சிறப்பு
இத் திரு க் கோயில் இறை வன் அருள் மிகு சிவசுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானையோடு ஒரே பீடத்தில் கருங்கல்லில் புடைப்புச் சிற்பமாகக் கையில் வில்லுடன் அரியதொரு காட்சிதருகிறார்.
 
திருவிழாக்கள்
இத்திருக்கோயில் பிரம்மோற்சவ திருவிழாவான பங்குனி உத்திரப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இத்திருவிழாவில் தேரோட்டத்தின்போதும் மறுநாள் பங்குனி உத்திரத்தன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடியும் அலகுகாவடியும் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அன்று முழுவதும் இறைவனுக்கு பால் அபிஷேகம் மட்டுமே இடைவிடாமல் நடைபெறும். இத்திருக்கோயில் முருகன் குடிகொண்ட பிரார்த்தனைத் தலமாகும்.
 
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை 7.00 மணிமுதல் மதியம் 12 மணிவரையில் மாலையில் 400 மணிமுதல் 8 மணிவரை
 
அலுவலக முகவரி
நிர்வாக அறங்காவலர் அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் வேலுடையான்பட்டு, நெய்வேலி-3, குறிஞ்சிப்பாடி வட்டம்

 

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *