திருக்கோயில் அமைவிடம்
இத்திருக்கோயில் கடலூரிலிருந்து வடலூர் செல்லும் பிரதான சாலையில் கடலூரிலிருந்து 32 கி.மீ. தூரத்திலும்,
வடலூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும் ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது.
 
 
இறைவி பெயர்
அருள்மிகு புத்துமாரியம்மன்
 
தல விருட்சம்
வேம்பு
 
தீர்த்தம்
புஷ்பகரணி
 
தல சிறப்பு
 
இத்திருக்கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் நான்கு புறமும் உயரமான சுற்று மதில்களால் ஆனது. கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேலாக விளங்கிவரும் தல விருட்சமாகிய வேம்புமரம் காட்சியளிக்கின்றது.
கர்ப்பக்கிரகத்தில் சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய மாரியம்மன் புற்றின் மீது அமர்ந்து உடுக்கை, சூலம், கத்தி, கபாலம் ஏந்திய நான்கு திருக்கரங்களுடன் கம்பீரமாக சிரித்த முகத்துடன் காட்சி அளிக்கின்றார். ஐந்து தலை நாகம் அம்பாளுக்கு குடை பிடிப்பதுபோல் அமைந்திருப்பது இன்னும் சிறப்பானதாகும். அம்பாளின் காலடியில் ரேணுகா சிலா விக்கிரகமாக கழுத்துமாரியம்மன் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறாள்.
 
பிரார்த்தனை
இத்திருக்கோயில் இறைவியை வெள்ளியன்று விரதம்
இருந்து வணங்கி வழிபடுவோருக்கு அனைத்துவித நோய்களும் தீரும் என்றும், புத்திர பாக்கியம் கிட்டும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருவிழாக்கள் திருக்கோயிலின் பெருந்திருவிழாவாக ஆடிமாதம்
நடைபெறும் செடல் திருவிழாவாகும், இத்திருவிழா பத்து நாள்கள்
வெகு சிறப்பாக நடைபெறும். மேலும் தைமாதம் நடைபெறும் சாகை
விழா (கூழ் வார்த்தல்), வைகாசி மாதம் முதல் வெள்ளி அக்னி நட்சத்திரத்தில் பானக பூஜை விழாவும், புரட்டாசியில் நவராத்திரி விழாவும், மார்கழியில் திருப்பட்சியும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
 
பூஜை காலங்கள் இரண்டுகால பூஜை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை 6.00 மணிமுதல் மதியம் 12 மணி வரையில் மாலையில் 400 மணிமுதல் இரவு 8 மணிவரை
 
அலுவலக முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு புத்துமாரியம்மன் திருக்கோயில், குறிஞ்சிப்பாடி, குறிஞ்சிப்பாடி வட்டம் – 607302.

 

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *