அமைவிடம்
விருத்தாசலம் நகருக்கருகே மேற்கே திட்டக்குடி செல்லும் சாலையில் சுமார் 17 கி.மீ தொலைவில் பெண்ணாடம் எனும் நகரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னை-திருச்சி புகைவண்டிப் பாதையில் பெண்ணாடம் புகைவண்டி நிலையத்திற்குக் கிழக்கே 1% கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தலத்தின் பெயர் திருப்பெண்ணாகடம். திருக்கோவிலின் பெயர் திருத்தூங்கானை மாடம்.
 
இறைவன் பெயர்
பிரளயத்திலிருந்து மக்களைக் காத்தமையால் இறைவன் பிரளயகால ஈசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இங்குக் குடிகொண்டுள்ள இறைவனுக்கு சுடர்க்கொழுந்து நாதர், கைவழங்கீசர் எனவும் பெயர்கள் உண்டு.
 
இறைவி பெயர்
அருள்மிகு அழகிய காதலியம்மன், ஆமோதனாம்பாள், கடந்தைநாயகி எனத் திருப்பெயர்கள் வழங்கப்பெறுகின்றன.
தல வரலாறு
பெண்ணாகடம் பெண்+ஆ+கடம் எனும் மூன்று சொற்களின் கூட்டில் தோன்றியதாகும். பெண் என்றால் தேவகன்னியர், ஆ என்றால் காமதேனு, கடம் என்றால் வெள்ளை யானை. இம்மூவரும் இத்தல இறைவனை வழிபட்டதால் இவ்வூருக்குப் பெண்ணாகடம் எனப்பெயர் வழங்கலாயிற்று.
சிவஞானபோதம் அருளிய மெய்கண்ட தேவ பெருமான் அவதரித்த திருத்தலம் இதுவேயாகும். சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறைஞானசம்பந்தர் அவதரித்ததும் இத்தலமே.
ஒருமுறை பிரளயம் எனப்படும் ஊழிக் காலக் காலவெள்ளம் பெருக்கெடுத்து மண்ணுலகையும், உயிர்களையும் அழித்து முன்னேறிய போது சைவமும், தமிழும் தழைத்தோங்கிய வெள்ளாற்றிற்கும் தென் பெண்ணையாற்றுக்கும் இடைப்பட்ட நடுநாடு மட்டும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படாது உயர்ந்து நின்றது கண்ட தேவர்கள் அதற்கான காரணத்தைத் தேடியபோது நடுநாட்டின் கண் வெள்ளாற்றங்கரையில் குடிகொண்டிருந்த இறைவனே இதற்குக் காரணம் எனக் கண்டறிந்து அந்த ஈசனை
நாடி ஊழிவெள்ளத்திலிருந்து உலகை உய்விக்க வேண்டினர்.
எம்பெருமானும், நந்தியம்பெருமானுக்கு வெள்ளத்தைத் தடுக்க ஆணையிட்டார். நந்திகேசுவரர் கிழக்கு நோக்கித் திரும்பி ஊழி வெள்ளத்தை உறிஞ்சிவிட்டதாக திருக்குடந்தைப் புராணத்தில் பிரளயம் காத்த சருக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதுமுதல் இத்தலத்து நந்தியம்பெருமானுக்கு அதிகாரநந்தி எனப்பெயர் வந்தது. இத்திருக்கோயிலில் பிற சிவன் கோயில்களுக்கு மாறாக நந்திகேஸ்வரர் இறைவனை பார்த்திராமல் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பதைக் காணலாம்.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான கலிக்கம்பர் அவதரித்த திருத்தலம் இதுவாகும். அவரும், அவர் தம் மனைவியாரும் தம் வீட்டிற்கு வருகின்ற சிவனடியார்களுக்குப் பாத பூசை புரிவது வழக்கம். ஒருநாள் அவர்களது இல்லத்திற்கு வந்த சிவனடியார்களுள் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் கலிக்கம்பர் வீட்டில் குற்றேவல் புரிந்து வந்த ஒருவராக
கையைத் துண்டித்துவிட்டார். கருணாமூர்த்தியான சுடர்க்கொழுந்து நாதர் கலிக்கம்பர் மனைவிக்கு இழந்த கையை மீண்டும் வழங்கியதால் அப்பெருமான் கை வழங்கீசர் எனப்படுகிறார்.
தலத்தைப் பாடியவர்கள் திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம்.
 
பூஜைகள்
இத்திருக்கோயிலில் நான்கு கால பூஜை நடைபெற்று வருகின்றன.
திருவிழாக்கள்
ஆடிப்பூரத் திருக்கல்யாணம், திருக்கார்த்திகை பிரதோஷம், மற்றும் சித்திரைப் பெருவிழா ஆகிய விழாக்கள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.
 
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை 8.00 மணிமுதல் மதியம் 12.00 மணிவரையில் மாலையில் 400 மணிமுதல் இரவு 8.00 மணிவரை
 
அலுவலக முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில்,
பெண்ணாடம், திட்டக்குடி,

 

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *