திருக்கோயில் அமைவிடம்
இத்திருக்கோயில் பண்ருட்டி நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
 
இறைவி பெயர்
அருள்மிகு படைவீட்டம்மன்.
 
தல வரலாறு
பல்லவ மன்னர்கள் படையெடுத்து வந்தபோது இந்த இடத்தில் பாடி வீடு அமைத்து அம்மனை வழிபட்டு, பின்னர் படைநடத்தி வெற்றிபெற்றார்கள் என்பது வரலாறு. அதனால் அம்மனுக்குப் படைவீட்டம்மன் என்று பெயர் விளங்குகிறது. இத்திருக்கோயிலின் கருவறையில் மிகப்பெரிய புற்று அமைந்துள்ளது. அதில் அம் ம ன் நாக வடிவில் குடிகொண்டுள்ளாள். மூலவரான அம்மனுக்குக் கழுத்துடன் கூடிய தலைமட்டுமே உள்ளது. முழுஉருவம் இல்லை.
 
இத்தாயானவள் குல தெய்வமாகவும் விளங்குகின்றாள். இது ஒரு பிரார்த்தனைத் தலமாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெண்கள் கூட்டம் இத்திருக்கோயிலில் அலை மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. படைவீட்டம்மன் இப்பகுதியில் பேசும் தெய்வமாக விளங்குகின்றாள்.
 
திருவிழாக்கள்
ஆடி மாதம் வெள்ளிக்கிழமை செடல் உற்சவமும், தேரோட்டமும் வெகு சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *