பெயர்: வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்
மூலவர்: மாசிலாமணீஸ்வரர் (பாசுபதேசுவரர், நிர்மலமணீசுவரர்)
தாயார்: கொடியிடை நாயகி (கொடியிடையம்மை, லதாமத்யாம்பாள்)
தல விருட்சம்: முல்லை
தீர்த்தம்: கல்யாண தீர்த்தம்
ஆகமம்: சிவாகமம்
சிறப்பு திருவிழாக்கள்: வைகாசி பிரம்மோற்ஸவம், மாசித்தெப்ப விழா, ஆனியில் வசந்த உற்சவம்.
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: சுந்தரர்

வடதிருமுல்லைவாயில் – மாசிலாமணீஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். இது செங்கற்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வவனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், கலியுகத்தில் முல்லைவனமாகவும் விளங்குகிறது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

தல வரலாறு
தொண்டை நாட்டில் வடதிசையில் முரடர்களாகிய குறும்பர்கள் ஓணன், வாணன் என இருவர் இருந்தனர். அவர்கள் சிறு தெய்வமான வைரவரை வழிபடுபவர்கள், வன்முரையால் மற்றவர்கள் பொருளைச் சேர்த்துக்கொண்டு பெரிய அரண்களைக் கட்டிக்கொண்டு, பொருளை இழந்தவர்கள் தாக்கும் போது இந்த அரண்களில் பதுங்கிக் கொண்டு கொடுமைகள் செய்துவந்தனர். தொண்டை நாட்டைச்சேர்ந்த புழல் கோட்டத்தினுள் நுழைந்து அடிக்கடி மக்களுக்குத் துன்பம் விளைத்து வந்தனர்.

தலவரலாறு-அறிவிப்புப் பலகை
அவர்களின் அடாத செயலுக்கு ஒரு முடிவுகட்டி அடக்கி வைக்கும் நோக்கத்தோடு தொண்டைமான் காஞ்சியிலிருந்து படையுடன் கிளம்பினான். திருமுல்லைவாயில் வந்த போது பொழுது சாந்துவிடவே அன்று இரவை அங்கேயே கழிக்க எண்ணி தங்கிவிட்டான். நடுநிசி வேளையில் வடகிழக்குத் திசையிலிருந்து மணிச்சத்தம் கேட்டது அது அருகில் உள்ள சிவன் கோவிலின் அர்த்தசாம பூசையின் மணி ஓசையாக இருக்கலாம் என அரசன் எண்ணினான். அது குரும்பர்களின் அரணிலிருந்து வந்தது என அமைச்சர்கள் சொல்ல பொழுது விடிந்ததும் தொண்டைமான் படையுடன் குரும்பர்களை அடக்க படையை உடன் நடத்திச் சென்றான்.

தொண்டைமான் படையுடன் வருகிறான் என்னும் செய்தியைத் தெரிந்துகொண்ட குரும்பர்கள் படையைத் திரட்டிக்கொண்டு போர்செய்தனர். தொண்டைமானின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் குரும்பர்கள் அரணுக்குள் ஒளிந்துகொண்டனர். குரும்பர்களின் தெய்வமான வைரவனின் வரத்தால் பெற்ற பூதத்தின் உதவியால் தொண்டைமானின் படைகளை விரட்டி அடித்தனர், இனிமேல் போர் செய்ய இயலாது என்று எண்ணிய தொண்டைமான் பொரை நிறுத்திவிட்டு பாசறைக்குத் திரும்பினான். வரும் வழியில் மன்னன் ஏறிவந்த யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் பிண்ணி பிணைந்தன, யானை தன் காலை எடுத்து வைக்க முடியாத நிலை ஏற்படவே மன்னன் யானையின்மேல் அமர்ந்தபடியே முல்லைக்கொடிகளை வெட்டினான். அந்த இடத்தில் இருந்த கொடிகள் வெட்டுப்பட்டு அறுந்தன, அந்த இடத்திலிருந்து குருதி (இரத்தம்) பீறிட்டு வரவே மன்னன் திடுக்கிட்டு யானையிலிருந்து இறங்கி அந்த இடத்தை விலக்கி ஆராய்ந்து பார்த்தான். அங்கு இறைவனின் திரு உருவாகிய இலிங்கத்தைக் கண்டான், தரையில் விழுந்து புரண்டான், வியர்த்துப் போனான், கண்ணில் நீர் பெருகியது. தனது உடைவாளை எடுத்து தனது கழுத்தில் வைத்து அருத்துக்கொள்ளும் சமயம் இறைவன் தோன்றி “மன்னனே வாளால் வெட்டுண்டாலும் மாசிலா மணியாக (குறையில்லா மணியாக) இருப்போம் வருந்தற்க நீ நந்தியின் துணையுடன் போர் செய்து வெற்றி பெறுவாயாக” எனக் கூறி மறைந்தார். பிறகு தொண்டைமான் நந்தியின் துணையோடு குறும்பர்களை வென்று பின் அவர்களின் அரண்களில் இருந்த இரண்டு வெள்ளருக்குத் தூண்களை எடுத்து வந்து திருமுல்லைவாயிலில் இறைவனுக்கு திருக்கோவிலைக் கட்டிவித்தான். இன்றும் அந்த வெள்ளருக்கந் தூண்கள் மாசிலாமணீசுவரர் கருவறையின் வாயிலில் உள்ளது.

சுந்தரமூர்த்தி நாயனார்
திருமுல்லைவாயில் மாசிலா மணீசுவர பெருமானின் திருமேனியைக் கண்டு பெருமானுக்கு திருக்கோவில் அமைத்து கருவறை, மகாமண்டபம், பட்டி மண்டபம், அலங்கார மண்டபம், கலியாண மண்டபம் முதலியவற்றை அமைத்து நித்திய பூசைகள் தவறாமல் நடைபெற ஏற்பாடுகளை செய்து வழிபட்டவன் தொண்டைமான் சக்ரவர்த்தி. இதனை சுந்தரமூர்த்தி நாயனார்


சொல்லரும் புகழான் தொண்டமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையால் கட்டிட்டு
எல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட்டு
அருளிய இறைவனே

-சுந்தரர் வட திருமுல்லைவாயில் திருப்பதிகம்

பெரிய புராணத்தில்
வட திருமுல்லைவாயில் பற்றி பெரியபுராணச் செய்யுள்,

அங்கு நாதர் செய்யருள் அதுவாக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே
பொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து
திங்கள் வேணியார் திருமுல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *