இத்திருக்கோயில் கடலூர்-விருத்தாசலம் வேப்பூர் செல்லும் சாலையில் கடலூரிலிருந்து சுமார் 63 கி.மீ. விருத்தாசலத்திலிருந்து வேப்பூர் சாலையில் 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
 
இறைவன் பெயர்:- அருள்மிகுகொளஞ்சியப்பர்
 
தல வரலாறு:-
 
திருக்கோயில் அமைந்துள்ள இடம் நூற்றைம்பது
ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடாக இருந்தபோது பசுமாடு
ஒன்று அக்காட்டில் உள்ள கொளஞ்சி செடிகளின் நடுவே பலிபீட
உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாகப் பால் சொரிவதைக் கண்டு இது புனித தெய்வம் எனக் கருதி இதனை என்ன தெய்வமாகக் கருதி வணங்குவது என்பது குறித்து ஆராய்ந்தபோது விருத்தாசல தலவரலாற்றில் தம்பிரான் தோழர் என்று சொல்லக்கூடிய சுந்தரர் திருமுதுகுன்றம் அடையும்போது சுவாமி, அம்பாள் பெயர்களைக் கேள்வியுற்று முதுமைத் தன் ைம வாய்ந்த இவர்களால் பொன், பொருள் கிடைக்காது எனப் பாடாது ஒதுங்கிச் ெச ன் ற ேப ா து திருமுதுகுன்றத்தீசன் ப க் த டேன Iா டு திருவிளையாடல் புரிய தனது மைந்தன் பூரீ முருகனை வேடனாக அனுப்பிப்  சென்று பின்னர் சுந்தரமூர்த்தி சுவாமி திருமுதுகுன்றத்தில் பதிகம் பாடி கேட்டுக்கொண்டவாறு பூரீ முருகன் காவல் தெய்வமாக திருமுதுகுன்றத்தீசனின் நான்கு திசைகளிலும் எழுந்தருள அதன்படி திருமுதுகுன்றத்து மேற்கே அடர்ந்த காட்டில் பசுவின் கால் குளம் படிபட்டு பூரீ கொளஞ்சியப்பன் எனும் திருநாமம் பெற்று அருள்பாலித்து வருகிறார்.
 
தலச் சிறப்பு:-
 
அருள்மிகு கொளஞ்சியப்பராக விளங்கி வரும் பூரீ முருகன் பிற திருக்கோயில்களை விட மாறுபட்டு உருவமின்றி அரூ வமாக இத் த லத்தில் எழுந்த ருளியிருப்பதும் , இத்திருக்கோயிலில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணிவரை இடைவிடாதுநடைதிறந்து இருப்பதும் சிறப்பானதாகும்.
நாகன் கண்ணப்பரை புத்திரராகப் பெறுவதற்கு
 
முருகப்பெருமானுக்கு வாரண சேவலோடு வரிமயில் குலங்கள் விட்டான் என்று சேக்கிழார் கூறியிருக்கிறார். இன்றைக்கும் இத்திருக்கோயிலில் தங்கள் காணிக்கையாகச் சேவல் விடுவது, முடி எடுத்தல், காது குத்துதல், காவடி எடுத்தல், குழந்தைகளுக்குக் காப்பிடுதல், திருமணம் செய்தல் பெருமளவில் நடைபெறுகிறது. தீராத நோய் உள்ளவர்கள் இத்திருக்கோயிலில் இடும்பன், கடம்பன் சந்நிதியில் தங்கி நோய் குணமாகிச் செல்வதும் பெருமளவில் நடைபெற்றுவருகிறது.
 
கருணை இல்லம்:-
 
ஆதரவற்ற குழந்தைகளைக் கொண்டு கருணை இல்லம் ஒன்று பராமரித்துவரப்படுகிறது.
 
பிரார்த்தனை தலம்:-
 
அருள்மிகு கொளஞ்சியப்பர் பிரார்த்தனை தெய்வமாக விளங்குவதோடு நீதி தவறா நீதி மானாகவும் விளங்கி வருகிறபடியால் சேவார்த்திகள் தங்களின் நியாயமான குறைகளை நீதிமன்றத்தில் பிராது செய்வது போன்று அருள்மிகு
கொளஞ்சியப்பரிடமும் பிராது எழுதி அதனை முனியப்பர் சன்நிதி வேலில் கட்டிவிட்டால் கட்டிய 20 நாள்களுக்குள் பிராது எழுதியவரின் குறைகள் நிவர்த்தியாகி வருகின்றபடியால்
திருக்கோயிலில் இவ்வேண்டுதல் மிக முக்கியத்துவம் பெற்றதாக விளங்கி பிரார்த்தனை தலமாக விளங்குகின்றது.
 
பூஜைகள்:-
இத்திருக்கோயிலில் தினசரி நான்கு கால பூஜை நடைபெறுகிறது.
திருவிழாக்கள்:-
பெளர்ணமி, கிருத்திகை போன்ற மாத பூஜைகளும் சித்ரா பெளர்ணமி அன்று பால்குட அபிஷேக விழா, வைகாசி விசாகம் அன்று புஷ்பாஞ்சலி ஏகதின லட்சார்ச்சனை, கந்தர்சஷ்டி லட்சார்ச்சனை, சுவாமி புறப்பாடு, ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தமிழ்ப்புத்தாண்டு, பிரமோற்சவமாக பங்குனி உத்திரத் திருவிழா 10 தினங்கள் மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திரத் திருவிழா அன்று லட்சக்கணக்கான மக்கள் கூடித் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இத்தகைய பல சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலத்தில் பக்தர்கள் வந்து வழிபட்டு கொளஞ்சியப்பர் அருளைப் பெறுகின்றனர்.
 
தங்கும் வசதி:-
 
6 அறைகள் கொண்ட விருந்தினர் விடுதி. 21 அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதி. பக்தர்களுக்குத் தேவையான அளவிற்குப் பாதுகாப்புடன் கூடிய குடி தண்ணிர் வசதி, குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:-
காலை 6.00 மணிமுதல் இரவு 8.30 மணிவரை. அலுவலக முகவரி செயல் அலுவலர், அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர், விருத்தாசலம் வட்டம். தொலைபேசி எண்: 04143-230232

 

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *