திருக்கோயில் அமைவிடம்
சிதம்பரம் பேருந்து நிலையம் எதிர்புறம் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
 
இறைவி பெயர்
அருள்மிகு மாரியம்மன்
தல வரலாறு
இந்த மாரியம்மன் கிள்ளை அருகிலுள்ள பிச்சாவரம் ஜமீன் வகையராவில் இதைக் குலதெய்வமாக வணங்கி வந்துள்ளார்கள். இதுபோல் பூரீநடராஜர் கோயிலில் உள்ள தீட்சிதர்களும் குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள். இத்திருக்கோயிலுக்கு ஆடி மாதத்தில் தீமிதி திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயில் வளாகத்தில் பேச்சியம்மன் கோயில்,துர்க்கையம்மன் கோயில், நவக்கிரஹ கோயில், ஐயப்பன் கோயில் இந்த ஆலயத்தில் பக்தர்களால் வழிபட்டு இருந்துவருகிறது.
 
இந்தக் கோயிலின் முக்கிய அம்சம் மாரியம்மன் எதிர்புறத்தில் நந்தி இருந்து வருகிறது. சில மாரியம்மன் கோயிலில் சிங்கம், கழுமரம்தான் இருக்கும்.
 
முன் புராண காலத்தில் சிவபெருமான் அசுரர்கள் தில்லை நகருக்குள் நுழையாமல் இருக்க தெற்கே வெள்ளந்தாங்கி அம்மனும் மேற்கே எல்லையம்மனும், வடக்கே தில்லைக் காளியும் கிழக்கே மாரியம்மனும் இருக்க சிவபெருமான் கட்டளையிட்டதாக தல புராணத்தில் இருந்து வருகிறது. அன்று முதல் இந்த மாரியம்மன் கோயிலுக்கு கீழத்தெரு மாரியம்மன் என்று பெயர் பெற்று விளங்கிவருகிறது. சிதம்பரம் நடராஜர் தல வரலாற்றில் இந்த செய்திஇடம்பெற்றுள்ளது.
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *