இரும்பை, வானூர் வட்டம்.

இறைவன் :

மகா காளீஸ்வரர்

இறைவி :

குயில்மொழி நாயகி, மது சுந்தரநாயகி

தீர்த்தம் :

மாகாள தீர்த்தம்

தலவிருட்சம் : புன்னை

ஆகமம்: காமிகம்

அமைவிடம்:

திண்டிவனத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் 30 கி.மீ. தொலைவிலும் பாண்டிச்சேரியிலிருந்து 13கி.மீ, தொலைவிலும் திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையிலிருந்து 2 கி.மீ. உள்ளே திரு இரும்பை மாகாளம் உள்ளது. இரும்பை கூட்டுச்சாலையிலிருந்து வடக்கில் 2கி.மீ தொலைவில் திருக்கோவில் அமைந்துள்ளது.

தல வரலாறு:

தொண்டை நாட்டு தேவாரத் த ல ங் க ளி ல் இத்தலம் 32வது தலம். இலுப்பை மரங்கள் நிறைந்த பகு தி யா த லின் இலுப்பை வனம் என்பது இரும்பை எனவும், மாகாளர் பூசித்ததால் கோவில் மாகாளம் எனவும்

இருஞ்சேரி இலும்பை எனவும் வழங்கப்படுகிறது. மாகாளர் இத்தல பெருமானை வழிபட்டு அருள் பெற்றதால் இறைவன் மாகாளர் என்ற திருப்பெயரோடு விளங்குகிறார். கடுவெளிச் சித்தர் இத்தலத்தில் கடுந்தவம் புரிந்து வந்தார். அக்காலத்தின் மழையில்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்ட இந்நாட்டுச் சிற்றரசன், இவரது கடுந்தவமே மழையின்மைக்கு காரணம் என எண்ணி ஒரு தேவதாசியின் மூலம் சித்தரது தவத்தைக் கலைத்தான். சித்தர் தவம் கலைந்து வருந்தி அத்தலத்திலேயே வாழ்ந்து வந்தார். ஒரு நாள் கோவில் பெரு விழாவில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சியில் அந்நடன மாதின் காற்சிலம்பு கீழே கழன்று விழுந்தது. சித்தர் தெய்வீக நாட்டிய நிகழ்ச்சி தடைபடக் கூடாதென்றெண்ணி அச்சிலம்பை எடுத்து நடனமாதின் காலில் பூட்டினார். அ  ைத க ண் ட மக்கள் சித்த ரை ஏளனம் செய்து நகைத்தனர். சித்தர் சினந்து “வெல்லும் பொழுது விடுவேன் வெகுளியை. கல்லும் பிளந்து கடு வெளியாமே” என்று

பாடினார். அந்நிலையில் ஆலயத்தில் உள்ள மூல இலிங்கம் வெடித்து எட்டு பகுதிகளாக சிதறியது. இதையறிந்த மன்னன் சித்தரிடம் மன்னித்து அருளுமாறு வேண்டினான். சித்தர் மீண்டும் ஒரு பாடல் பாடியபோது சிதறிய லிங்கம் ஒன்று கூடியது. அதனை செப்பு தகடு வேய்ந்து ஒன்றாக்கி மன்னன் வழிபட்டான். அன்று முதல் அந்நிலையிலேயே சிவலிங்கம் விளங்கி வருகிறது.

திருக்கோவில் அமைப்பு :

இக்கோவில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பிரகாரத்துடன் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்க வடிவில் அருள்மிகு திருமாகாளேசுவரராக கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அம்மன் குயில்மொழிநாயகி தெற்கு நோக்கிய சன்னதியில், எழுந்தருளியுள்ளார். சுவாமி சன்னதிக்கு பின்புறம் ஆறுமுகப் பெருமான் சன்னதி சிறப்புடையது. மூலஇலிங்கம் எட்டாக வெடித்துள்ளது. செப்புத்தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி யளிக்கிறது.

தனிச்சிறப்பு:

திருஞானசம்பந்தர் எழுந்தருளி இத்தல இறைவனை வழிபட்டு

“மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்

கொண்டகையாற் புரம்மூன் றெரிந்த குழகன்னிடம்

எண்டிசையும் புகழ்போய் விளங்கு மிரும்பைதனுள்

வண்டுகீதம் முரலடபொழில் கலாய்நின்ற மாகாளமே”

– என்று திருப்பதிகம் பாடியுள்ளார் ஷேத்திரக் கோவையில்

அருளிய ஒரு பாடலையும் இத்தலம் பெற்றுள்ளது. இக்கோவிலில் 4 கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டுகளில் குலோத்துங்கசோழன், விக்கிரம பாண்டியன், இராசராயர், சம்புவராயர் காலத்தில் நிலதானம் அளிக்கப்பெற்ற செய்தியையும், இவ்வூரை ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மாத்தூர் நாடு என்றும், ஊர் இரும்பை மாகாளம்’ என்றும், இறைவன் பெயர் திருமாகாளமுடையார்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

திருவிழாக்கள்

ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தில் காவடி உற்சவம், கார்த்திகை சோமவார நாளில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

திருக்கோயில் தரிசன நேரம்

காலை 7.00 மணி முதல் பிற்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும்திருக்கோயில் திறந்திருக்கும்.

போக்குவரத்து வசதி

திண்டிவனம், பாண்டிச்சேரியிலிருந்து பேருந்து வசதிஉள்ளது.

தங்கும் வசதி

திண்டிவனம், பாண்டிச்சேரியிலிருந்து தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.

தொடர்பு முகவரி

செயல் அலுவலர், அருள்மிகுதிருமகாகாளீஸ்வரர் திருக்கோயில், இரும்பை, வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *