(மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்)
வைய மேழுமுண் டாலிலை வைகிய
மாயவன் அடியவர்க்கு
மெய்யனாகிய தெய்வநாயகனிடம்
மெய்தகு வரைச் சாரல்
மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய
முல்லையங் கொடியாட
செய்ய தாமரைச் செழும்பனை திகழ்தரு
திருவயிந்திரபுரமே
– திருமங்கையாழ்வார்.
திருக்கோயில் அமைவிடம்
 
கடலூர் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் அமையப்பெற்றுள்ளது.
 
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயிலாகும்.
 
இறைவன் பெயர்
 
தேவநாதன் அநேகஜ்யோதிஸ்
தெய்வநாயகன் அச்சுதன்
மூவராகிய ஒருவன் பவெளஷதம்
தாசசத்தியன் மேவுசோதி
ஸ்திரஜ்யோதிஸ் அடியவர்க்கு மெய்யன்
 
இறைவி பெயர்
 
ஹேமாம்புஜவல்லி பார்கவி
அலைவாய் உகந்த மகள் தரங்கமுகநந்தினி
அம்போருஹவாஸினி செங்கமலத்தாயார்
பெருமாள்,நாச்சியார்-கிழக்குநோக்கியசந்நிதிகள் பெருமாள் நின்ற திருக்கோலம், நாச்சியார் அமர்ந்த திருக்கோலம். சுவாமிக்கு வலப்பக்கத்திலே தாயார்
திருச்சந்நிதி.
 
தலவிருட்சம்
வில்வமரம்
 
தீர்த்தங்கள்
ஒரு சமயம் பெருமாளுக்குத் தாகம் ஏற்படுகையில் அதைத் தீர்க்க கருட பகவான் தம் அலகினால் வகிர்ந்து கொண்டு வந்த நதி கெருட நதி (அ) கெடில நதி என்றும் அதற்குச் சற்று நேரமானதினாலே ஆதிசேஷன் தன் வாலினால் பூமியைக் குடைந்து கிணறு அமைத்து தீர்த்தம் வரவழைத்ததாக புராண வரலாறு கூறுகிறது. இப்பகுதியில் கெடில நதி தெற்கிலிருந்து வடக்கில் பாய்வதால் உத்திரவாஹினி எனப் பெயர் பெறுகிறது மற்றும் பிரம்ம தீர்த்தம், பூ தீர்த்தம், இலட்சுமி தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன.
தல வரலாறு
 
ஸ்ரீமந் நாராயணன் அனைத்துயிர்களையும்
பாதுகாக்கத் திருவுள்ளம் கொண்டு இப்பூவுலகில் கோயில்
கொண்டெழுந் தருளியிருக்கும் புண்ணிய திருத்தலங்கள் பல.
அவற்றுள் ஓரிரண்டாம் சீர் நடு நாடு என சிறப்பு வாய்ந்த
நடுநாட்டுத் திருப்பதி இரண்டில் திருமங்கையாழ்வாரால்
மங்களாசாசனம் செய்யப் பெற்ற திவ்ய தேசம்
திருவகீந்திரபுரமாகும். இத்திருக்கோயில் பல்வேறு மன்னர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சரித்திரச் சான்றுகள் கூறகின்றன.
அகீந்திரன் என்றால் ஆதிசேஷன். இவ்வூர் ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்டதாகும். அருகிலுள்ள மலை
பாகம் இதில் சேர்ந்திருப்பதால் ஒளஷதாசலமென்றும் பெயருடையது.
இத்திருக்கோயிலின் மூலவர் நின்ற திருக்கோலத்தில் தேவநாதன், தெய்வநாயகன், மெய்யன் என்ற பல்வேறு திரு நாமங்களிலும் , இருந்த திரு க் கோ லத் தில் அகீந்திரபுரநாதராகவும், கிடந்த திருக்கோலத்தில் பள்ளிகொண்ட நாதராகவும் காட்சிதருகின்றார்.
இத்திருக்கோயிலின் தாயார் அம்புருகவாசினி, ஹேமாம்புஜ நாயகி, பார்கவி, தரங்கமுக நந்தினி, செங்கமலத் தாயார் எனப்பல்வேறு திருநாமங்களால் அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில்தான் ஸ்ரீமந் வேதாந்த தேசிகர் 40 ஆண்டுகாலம் இங்குள்ள ஒளஷதாசலத்தில் தவம்புரிந்து, ஸ்ரீ ஹயக்கிரீவரையும், கருடனையும் கண்டு வரம் பெற்றார்.
ஸ்ரீ ஹயக்கிரீவர்சந்நிதி
ஸ்ரீ ஹயக்கிரீவருக்கு உலகிலேயே இவ்வூரில்தான் முதன்முதலில் தனியொரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள லஷ்மி ஹயக்கிரீவர் குழந்தைகளுக்கு கல்விச் செல்வத்தையும், அறிவாற்றலையும் அளிப்பவராவார். வியாழக்கிழமை தோறும் ஸ்ரீலஷ்மி ஹயக்கிரீவருக்கு மாணவ பக்தர்கள் பெருந்திரளாக வந்து வழிபட்டு அருள் பெறுகின்றனர்.
ஸ்ரீ வேதாந்த தேசிகன்
காஞ்சிபுரத்தைச் சார்ந்த தூப்புல் என்னும் ஊரில் அவதரித்த ஸ்ரீ வேதாந்த தேசிகன் இவ்வூரில் சுமார் 40 ஆண்டு காலம் வசித்துள்ளார். நவரத்ன மாலை, மும்மணிக்கோவை, போன்ற தமிழ் மொழி நூல்களையும் கருட பஞ்சாசத் , கருட தண்டகம் கோபாலவம் சுதி, ராமன்பேரில் ரகுவீர கத்யம், தாயாருக்கு ஸ்ரீசு தி போன்ற வடமொழி நூல்களையும் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆச்சார்யராக போற்றப்படுகிறார்.
 
தேசிகன் கருட மந்திரத்தை உச்சாடனம் செய்து கருடன் பிரத்யகூஷமாகி ஹயக்ரீவர் ஸ்லோகம் உபதேசிக்க அதனைத் தியானித்து ஸ்ரீ ஹயக்ரீவ ரைத் தேசிகன் ஸேவித்ததாகவும், கருடனால் தரப்பெற்ற ஸ்ரீயோக ஹயக்ரீவரைப் பூஜித்ததாகவும் வரலாறு கூறுகிறது.
 
ஸ்ரீயோக ஹயக்ரீவர் இன்றும் ஸ்ரீதேவநாதசுவாமி திருக்கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கிறார்.
 
தல சிறப்புகள்
 
இத்திருக்கோயிலில் வேறெந்த வைணவத்தலத்திலும் காண்பதற் கரிய வில் வ மரம் தல விருட்சமாக அமையப்பெற்றுள்ளது பெரும் சிறப்பாகும். இங்கு கருடனால் கொண்டுவரப்பெற்ற கருட தீர்த்தம் (கெடில நதி) கோவிலுக்கு மேற்குப் புறத்திலும், ஆதிசேஷனால் நிர்மாணிக்கப்பட்ட சேஷ தீர்த்தம் கோவில் பிரகாரத்திலும் அமையப்பெற்றுள்ளது. சேஷ தீர்த்தத்தில் செவ்வாய் தோஷம், நாகதோஷம் உடையவர்கள் பிரார்த்தனை செய்து நேர்த்திக் கடன் செய்துவருகின்றனர்.
வடகலை வைணவத்தலமான இத்திருக்கோயிலில் ஸ்ரீ தேவநாதன் சந்நிதி, ஸ்ரீ தாயார் சந்நிதி, ஸ்ரீ ராமர் சந்நிதி, ஸ்ரீவேணுகோபாலன் சந்நிதி,ஸ்ரீஆண்டாள் சந்நிதி ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதி, ஸ்ரீ பள்ளி கொண்டநாதர் சந்நிதி, ஸ்ரீ அஹிந்திரபுரநாதன் சந்நிதி, ஸ்ரீ சுவாமி தேசிகன் சந்நிதி, ஆழ்வார்கள் சந்நிதி என அனைத்துச் சந்நிதிகளும் அமையப் பெற்றுள்ளன. இத்தகு சிறப்பு வாய்ந்த தெய்வநாயகனை திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதிக்குத் தமையனாக வழிபடுவது பழக்கத்தில் உள்ளது. ஸ்ரீ தேவநாதன் தம்மை வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதோடு, திருப்பதி வெங்கடாஜலபதிக்கு வேண்டிக்கொண்ட பக்தர்கள் அங்கு செல்ல இயலாமல் ஏற்படும் காலங்களில் திருவந்திபுரத்திற்கு வந்து தனது பிரார்த்தனையை இங்கு நிறைவேற்றிச் செல்வது வழக்கத்தில் உள்ளது.
 
பூஜைகள்
இத்திருக்கோயிலில் வைகானச ஆகமப்படி 6 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
முக்கியதிருவிழாக்கள்
 
சித்திரை :
சித்திரையில் பெளர்ணமியை பத்தாந் திருவிழாவாகக் கொண்டுதேவநாதனுக்குப்பிரம்மோற்சவம்.
 
வைகாசி :
வைகாசியில் தேவநாதனுக்குப் பத்துநாள் வசந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
 
ஆனி :
பெளர்ணமியில் நெல்லிக்குப்பம் தோப்பு உற்சவம்
 
ஆடி:
ஆடிப்பூரம் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்
 
ஆவணி :
ஆவணி-திருவோணநட்சத்திரத்தைப்பத்தாம் நாளாகக் கொண்டு ஹயக்கிரீவனுக்குப்பத்துநாள் உற்சவம்.
 
புரட்டாசி :
தாயாருக்கு நவராத்திரிச் சிறப்பு திருவோண நாளைப் பத்தாம் நாளாகக் கொண்டு ஸ்ரீ தேசிகனுக்குப் பிரம்மோற்சவம். பெருமாளுக்கு எவ்வாறு பிரம்மோற்வசம் நடைபெறுகிறதோ அவ்வாறே தேர் முதலிய யாவும் உண்டு. பத்தாம் நாள் அதிகாலையில் ஒளஷத கிரியின் மீது அருள்மிகு தேசிகன் எழுந்தருளிஹயக்கிரீவர் சந்நிதியில் சிறப்பு வழிபாடு, காலை, கீழே எழுந்தருளி சந்நிதானங்களில் மங்களாசாசனம் செய்துகொண்டு தீர்த்த வாரி. அன்றைய தினம் ரத்னாங்கி சேவை கண்கொள்ளாகாட்சியாகும்.
 
கார்த்திகை :
விஷ்ணு தீபம் ஏற்றிவழிபாடு
 
மார்கழி:
அத்யயன உற்சவம் வைகுண்ட ஏகாதசிக்கு முன்னும் பின்னும் பத்துப் பத்து நாட்கள். அருள்மிகு தரங்கமுகநந்தினி திருக்கல்யாண உற்சவம் –
போகிப்பண்டிகையன்று
 
தை :
சங்கராந்தி, மாட்டுப்பொங்கல் உற்சவங்கள். பெண்ணையாற்றில்-(நத்தப்பட்டுதுறையில்)நீராடல்.
 
மாசி :
மாசிமக விழா வங்கக் கடலில் கடலாடு விழா
 
பங்குனி :
அருள்மிகு இராமநவமி-அருள்மிகு இராமனுக்கு 9நாள் நவமியை இறுதியாகக் கொண்டு உற்சவம்.
 
யுகாதிபண்டிகை.
பங்குனி உத்திரம். மற்ற வார, பஷ, மாச அயன, விஷப் புண்ணியகால விழாக்களும் நிகழும். விழாக்களில் ‘அலங்காரப் பிரியன்’ என்பதை இந்த திருப்பதியில் கண்கூடாகக் காணலாம். இத்திருக்கோயில் ஆண்டிற்கு 250 நாட்கள் திருவிழா நாட்களே ஆகும்.
 
திருமண மண்டபம்
இம்மலைமீது ஒரே நேரத்தில் 50 திருமணங்கள்
நடக்கும் அளவிற்கு விசாலமான திருமண மண்டபம் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, திருமணங்கள் நடைபெற்று வருகிறது.
 
கோயில் திறந்திருக்கும்
நேரம் காலை 6.00 மணிமுதல் மதியம் 12.00 மணிவரை. மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை.
 
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *