“செல்வ நெடுமாடம் சென்று சேண்
 
ஓங்கிச் செல்வ மதிநேயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேயச்
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே”
– திருஞானசம்பந்தர்.
திருக்கோயில் அமைவிடம்
 
தில்லைத் திருத்தலம், கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் என்னும் காவிரியின் பிரிவிற்கு வடக்கிலும், மணிமுத்தா நதிக்குத் தெற்கிலும், சென்னைக்கும்-திருச்சிராப்பள்ளிக்கும் உள்ள பிரதான இருப்புப்பாதையில் சிதம்பரம் இரயில் நிலையத்திலிருந்து 1கி.மீதொலைவில் மேற்கில் அமைந்துள்ளது.
இறைவன் திருப்பெயர்கள்
மூலட்டானேஸ்வரர், திருமூலநாதர், நடராசர்
 
இறைவி திருப்பெயர்கள்
உமையம்மையார், சிவகாமசுந்தரி.
 
ஆனந்த தாண்டவம் புரிந்தருளும் இறைவன் திருப்பெயர்
சபாநாயகர், கூத்தப்பெருமான், நடராஜர், விடங்கர், ரேமநடங்கர், தட்சிணமேருவிடங்கர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
 
விருட்சம்
தில்லைமரம்.
 
தீர்த்தங்கள்-10
 
1. சிவகங்கை தீர்த்தம், 2. பரமானந்த தீர்த்தம், 3. வியாக்ரபாத தீர்த்தம், 4. அனந்த தீர்த்தம், 5. நாகசேரி தீர்த்தம், 6.பிரம்ம தீர்த்தம், 7. சிவப்பிரியை தீர்த்தம், 8. புலிமேடு தீர்த்தம், 9. குய்ய தீர்த்தம், 10.திருப்பாற்கடல் தீர்த்தம்.
பூஜைகள்
சிவனுக்கு வேதவிதிப்படிதான்பூஜை செய்யவேண்டும்.
 
ஆறுகால பூஜைகள்
 
1. காலசந்தி, 2. இரண்டாங்காலம், 3. உச்சிகாலம், 4. சாயரட்சை, 5.இரண்டாம் மறுகாலம், 6. அர்த்தசாமம்.
 
தல வரலாறு
 
ஈசன் ஆனந்த தாண்டவம் ஆடிய தலம் இதுவாகும். மாணிக்கவாசக சுவாமிகள் இத்தலத்தில் சிவபுராணத்தைப் பாடிய பொழுது அங்கிருந்த சிவனடியார்கள் அதற்குப் பொருள் விளக்கம் கூறுமாறு வினவ, இதற்குப் பொருள் இதுதான் என்று சபாநாயகரைச் சுட்டி காட்டி நடராஜர் சந்நிதியின் உள்ளே அவர் சென்று இறைவனுடன் இரண்டறக் கலந்த அற்புதம் நிகழ்ந்த திருத்தலமாகும். சைவம் தழைக்க அவதரித்த சேக்கிழார் பெருமானார் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைப் பெரியபுராணம் என்ற தலைப்பில் எழுதிப் பல்லக்கில் எழுந்தருள அவருக்குச் சோழப்பேரரசன் சாமரம் வீச வீதிவுலா வந்து, தமிழ்நாட்டின் வரலாற்று உண்மைகள் கூறும் தமிழ் மொழியின் அரிய பொக்கிஷத்தை அரங்கேற்றிய திருத்தலம் இதுவாகும்.
அண்மைக் காலத்தில் இறைவனோடு இரண்டறக் கலந்த வடலூர் வள்ளற் பெருமானார் இராமலிங்க சுவாமிகள் இத்திருத்தலத்திற்குப் பல காலம் வந்து நடராஜப்பெருமானைத் தரிசித்து இறவாவரம் பெற்றார்.
 
தலப்பெயர்கள்
 
நடராஜப் பெருமான் இடையறாது கலைநடனம் புரிந்தருளும் இத்திருத்தலத்திற்குக் கோயில் என்பது சிறப்புப் பெயர், கோயில் என்றாலே சிதம்பரத்தைக் குறிக்கும். சைவர்களுக்குக் கோயில் சிதம்பரம், வைணவர்களுக்குக் கோயில் திருவரங்கம், தில்லைவனம் என்பது இத்தலத்தின் பெயர். தில்லை என்னும் மரங்கள் அடர்ந்து காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. இப்பொழுது இம்மரங்கள் காணக் கிடைக்கவில்லை. பெரும்பற்றப்புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவாநாளே என்பார் அப்பரடிகள். சித்+அம்பரம்=சிதம்பரம் – சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி, ஆகையால் ஞானாகாசம் பொன்னம்பலம், வியாக்கிரம், பூலோககைலாயம், புண்டரீசுபுரம் என்ற பெயர்களும் இதற்கு உண்டு
தலச்சிறப்புகள்
 
சைவர்களுக்கு முதன்மையான தலம் இத்தலம். இதில்
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் மேன்மை பெற்று விளங்குகின்றன. நடராஜப்பெருமானின் திருக்கூத்து. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் உணர்த்துகின்றது.
உலகம் விராடபுருடன் வடிவம். திருவாரூர் அதன் மூலாதாரம். திருவானைக்கா தொப்பூழ், திருவண்ணாமலை மணிப்பூரகம், திருக்காளத்தி கண்டம், காசி புருவமத்தி, சிதம்பரம் இருதயம் என்பர்.
இத்திருக்கோயிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராசசபை என்னும் ஐந்து சபைகளும் சிவன், விஷ்ணு திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்புகளாகும். பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள திருத்தலம் இது ஒன்றேயாகும்.
இத்தலத்தின் விருட்சம் தில்லைமரம். சிதம்பரம் பஞ்சபூத தலங்களுக்குள் ஒன்று ஆகாயத்தலமாக விளங்குகிறது. மாணிக்கவாசகர், குலாப்பத்து, கண்டப்பத்து, குயில்பத்து, கோத்தும் பி, திருப்பூவல் லி, திருத்தோணோக்கம், திருத்தெள்ளேனம், திருப்பொற்கண்ணம், திருப்பொன்னூசல், திருவுந்தியார், அன்னைப்பத்து, கோயில் மூத்ததிருப்பதிகம், எண்ணப்பதிகம், ஆனந்த மாலை, யாத்திரைப்பத்து முதலியன பாடியுள்ளார். மாணிக்கவாசகர் ஊமைப்பெண்ணைப் பேசவைத்த தலம், ஏடும், எழுத்தாணியும் கொண்டு மாணிக்கவாசகர் சொல்ல சொல்ல திருவாசகத்தை இறைவன் எழுதி முடித்தார். பின்பு மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலக்கோவையைப் பாடியருளினார். மாணிக்கவாசகர் அம்பலக்கூத்தன், அடிமலரில் இரண்டறக்கலந்த இடமும் இத்தலமேயாகும்.
திருஞானசம்பந்தர் தெற்கு வாயில் வழியாக வந்து அம்பலவாணன் கழலேத்தும் செல்வந்தரையே சிறப்புடைச் செல்வமாகக் கொண்ட தில்லை வாழ்அந்தணரைப் பதிகத்துள் முன்வைத்து ‘கற்றாங்கெரியோம்பி’ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடினார்.
அப்பரடிகள் கருநட்ட கண்டனை’ என்னும் திருவிருத்தமும், ‘பக்தனாய்ப் பாடமாட்டேன்’ என்ற திருநேரிசையும், பாடிய தலமும் இதுவேயாகும். மூவர் தேவாரம் முழுமையாகக் கிடைத்ததும் இத்தலத்தில்தான். உமாபதிசிவம் கொடிக்கவி பாடியதும், திருநாளைப்போவார் என்றழைக்கப்படும் நந்தனார் தீயில் மூழ்கி இறைவனுடன் இரண்டறக் கலந்த இடமும் இத்தலமாகும். சேந்தனார் “மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள்’ எனத் தொடங்கும் திருப்பல்லாண்டு திருப்பதிகம் பாடியுள்ளார். சேக்கிழார் ‘உலகெலாம்’ எனத் தொடங்கும் திருத்தொண்டர் புராணம் என்னும் காப்பியத்தைப் பாடி முடித்துள்ளார். பெரியபுராணம் என்று காப்பியத்தை அரங்கேற்றியுள்ளார். இத்தலம் திருநீலகண்டர் கோட்செங்கட்சோழன், கணம்புல்லர், கூற்றுவர் ஆகிய நாயன்மார்களும், மறைஞானசம்பந்தர் என்ற சந்தானகுரவர், இரணியவர்மன், வியாக்கரபாதர், பதஞ்சலி முதலியோர் வழிபட்டதலமாகும்.
வரலாற்றுச் சிறப்புகள்
இத்திருக்கோயிலில் முதலாம் பராந்தக சோழனால் பொற்கூரை வேயப்பட்டுள்ளது.
 
திருக்கோயில் அமைப்பு
இத்திருக்கோயில் 51 ஏக்கர்நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளில்
 
இராஜகோபுரங்கள் கம்பீரமாக அமைந்துள்ளன. இராஜகோபுரங்கள் 90 அடி நீளமும், 60 அடி அகலமும், 135 அடி உயரமும், நீண்ட சதுர அமைப்புடன் அமைந்துள்ளன. நடராஜப்பெருமான் தெற்கு முகமாக திருநடனம் புரிந்தருள்வதால் தெற்குக் கோபுரத்தின் மேல் சுவாமியின் கொடி கட்டப்பட்டுள்ளது. திருவிழாக் காலங்களில் சுவாமி புறப்பாடு கிழக்கு பக்க கோபுர வழியாக நடைபெறுகிறது. நான்கு இராஜகோபுரங்களைச் சுற்றிலும் 30 அடி உயரமுள்ள கருங்கல் மதிற் சுவர் வீரப்பநாயகர் மதில் என அழைக்கப்படுகிறது. தெற்குக் கோபுரத்தின் தென்மேற்கு மூலையில் முக்குறுணி விநாயகர் எட்டடி உயரமுள்ள மூர்த்தியாக உள்ளார். இதுபோல் வேறு எந்தத் தலத்திலும் காண இயலாது. கற்பக விநாயகர் மேற்கு கோபுரத்தை ஒட்டி அமைந்துள்ளது. ஏழு திருக்கரங்களுடன் நர்த்தனகணபதியாகக் காட்சியளிக்கிறார். துருவாசமுனிவருக்கு இரவு சாமவேளையில் நடனம் செய்து காட்சியளித்ததால் நர்த்தன விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
 
மூன்றாம் பிரகாரத்தில் ஞானசக்தியாக, சிவகாமசுந்தரி அம்மன் சந்நிதி அழகாக அமைந்துள்ளது.
உட்பிரகார கோயில் மனோமயம்
மனோமயகோஷமாகிய நர்த்தன சபையால் காளியுடன்
ஆடிய ஊர்த்துவ தாண்டவமூர்த்தி சந்நிதி அமைந்துள்ளது. இப்பிரகாரத்தில் நரசிம்ம அவதாரத்தில் உண்டான சினத்தை அடக்க சிவபெருமான் எழுந்தருளிய சரபேஸ்வரர் சந்நிதி
அமைந்துள்ளது.பொன்னம்பல தத்துவம்
இந்த இடம் பொன்னம்பலம், சிற்றம்பலம், ஞானசபை என்ற பெயர்களைக் கொண்டு விளங்குகிறது. பொன்னம்பலத்தின் மேல் ஒன்பது தங்கக் கலசங்கள் உள்ளன. இந்த ஒன்பதும் ஒன்பது சக்திகளாகும். 64 கைமரங்கள் 64 கலைகளாகும்.21600 ஒடுகள் மனிதன் தினமும் விடுகின்ற சுவாச · · S எ ண் ணி க் ைக ஆகும். 72000 ஆ னி க ள் மனிதனுடைய சுவாச சஞ்சார ஆதாரமான உணர்த்துவதாகும். ம னி த னு ைட ய இதயம் இடப்புறத்தே இருப்பது போல் கர் ப் பக் கி ரக ம் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே உள்ளது. கனக சபையில் உள்ள 18 தூ ண் க ள் 1 8 புராணங்களையும் 5 வெள்ளிப் படிகள் எழுதது களையும, வெள்ளி-பலக்கணிகள் 96-ம் 96 தத்துவத்தையும், சிற்சபையில் உள்ள 5 தூண்கள் ஐம்பொறிகளையும், பிரம்ம பூடத்தில் உள்ள 10 தூண்களில் 6 தூண்கள் 6 சாஸ்திரங்களையும், மற்ற4 தூண்கள் 4 வேதங்களையும் உணர்த்துகின்றன.
 
சிதம்பர ரகசியம்
சிற்சபையின் வலப்பக்கத்தில் தங்கத்தினால் ஆன வில்வ இலை மாலை ஒன்று தொங்கவிடப்பட்டு உள்ளது. மூர்த்தி இல்லாமல் வில்வம் தொங்குவதே இரகசியம். இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதே இதன் பொருளாகும்.
 
நால்வர் வருகை
கிழக்குக் கோபுர வழியாக மாணிக்கவாசகரும், தெற்குக் கோபுர வழியாக ஞானசம்பந்தரும், மேற்குக் கோபுர வழியாக அப்பரும், வடக்குக் கோபுர வழியாக சுந்தரரும் வந்து சபாநாயகரை வழிபட்டுள்ளனர்.
ஐந்து சபைகள்
சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, ராசசபை என5 சபைகள் உள்ளன.
 
நடராஜர் அபிஷேகங்கள்
 
1. சித்திரை திருவோணம் மாலை அபிஷேகம்
2. ஆணி உத்திரம் உதயகாலத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டபத்தில் அபிஷேகம்
3. ஆவணி வளர்பிறை சதுர்த்தசி மாலையில் அபிஷேகம்
4. புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி மாலை அபிஷேகம்
5. மார்கழி திருவாதிரை ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் அபிஷேகம்
6. மாசி வளர்பிறை சதுர்த்தசி மாலை அபிஷேகம்.
திருவிழாக்கள் 1 மார்கழி திருவாதிரை, 2. ஆனி உத்திரத்தில் வருகின்ற ஆணித்திருமஞ்சனம்.10 நாள்திருவிழாக்கள்.
 
தலத்துக்குரியநூல்கள்
தமிழகத்திலேயே அதிகமான நூல்களாலும், பாடல்களாலும், போற்றப்பெற்ற திருத்தலமாகும். தமிழ் நூல்கள் – 41. வடமொழிநூல்கள்-41.
 
கோயில் திறந்திருக்கும்
நேரம் காலை 6.00 மணிமுதல் மதியம் 12வரையில் மாலையில் 400 மணிமுதல் இரவு 8 மணிவரை
Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *