இறைவன் : அருள்மிகு அருணாசலேசுவரர்,அண்ணாமலையார்

இறைவி : அருள்மிகு அபீதகுஜாம்பாள்,உண்ணாமுலையம்மை

தலவிருட்சம் : மகிழம்

தீர்த்தம் : பிரமதீர்த்தம், சிவகங்கைத்தீர்த்தம் முதலிய தீர்த்தங்கள் உள்ளன.

ஆகமம் : காமிகம்

அமைவிடம்

ஞானத் தபோதனர்களை வா என்றழைக்கும் மலை அண்ணாமலை என்று சிறப்பித்து வழங்கப்படும் திருத்தலம் அருணைப் பதியாகும். பஞ்சபூதத் தலங்களில் நெருப்புத் தலமாக விளங்குகின்ற திருவண்ணாமலை எனும் இத்தலம் மாவட்டத்தின் தலைநகரமாகும். நெடுங்காலமாக வடாற்காடு மாவட்டத்தில் ஒரு சிறப்புமிக்க நகரமாக இருந்த இவ்வூர், சிறிது காலத்துக்குமுன் ஏற்பட்ட மாவட்டச் சீரமைப்புப் பிரிவின்படி, திருவண்ணாமலை என்னும் புதிய மாவட்டமாகப் பிரிக்கப்பட்டு தலைநகராகவும் விளங்குகிறது. தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்து இத்திருத் தலத்தை இணைக்கும் பெருவழிச்சாலைகள் (High Ways) உள்ளதால் இந்நகரை அடைவது மிகவும் எளிது. இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலமாகும். திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவிலும், தொடர்வண்டி நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இத்திருக்கோயில் வேலூரிலிருந்து 86 கி.மீ. தொலைவிலும், திண் டி வ ன த் தி லிருந்து 60 கி. மீ. தொலை வி லு ம் , விழுப்புரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் உள்ளது. தங்கும் வசதி

இத்திருக்கோயிலில் தங்கும் விடுதிகள் உள்ளன. அருணைப்பதியின் திருப்பெயர்கள்

அருணாசலம், சோணாசலம், அண்ணாமலை என்றெலாம் வழங்கப்பெறும் ஒப்பற்ற இப்பதியின் திருப்பெயர்களை அருணாசல புராணம் நவில்கின்றது.

விரும்பியவையெல்லாம் சித்திக்கப் பெறுவதால் – கெளரி நகரம் ஒளி பொருந்திய தலமாதலால்

தேசு நகரம் சூரியனையொத்த செந்நிற நெருப்பு) மலை உள்ளதால்

அருணை நகரம் சிறப்பு பொருந்திய இறைவன் வீற்றிருப்பதால் – சிவலோக நகரம் நான்மறையொலி நீங்காது காற்றில் கேட்டுக் கொண்டேயிருப்பதால்

வாயு நகரம் வீடுபேற்றை அருளுவதால்

முத்திநகரம் ஞானத்தை வழங்குவதால்

ஞான நகரம் முதன்மையான பதியாதலால்

தலேச்சுரம் வினைகள் அறுபடுவதால்

சுத்த நகரம் கயிலையை ஒத்திருத்தலால்

தென்கயிலை சோணநெருப்பு) மலையாதலால்

சோணகிரி இவ்வாறு பல பெயர்கள் திருவண்ணாமலைக்கு வழங்கப்படு கின்றன.

புராண வரலாறு

ஒருசமயம் பிரமன், திருமாலுக்கிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டுச் ச ண் ண ட யி ட் ட ன ர் . அ வ் வ ம ய ம் அவ்விருவருக்கிடையே ஆதியந்தமிலாத பெருஞ் சோதி ஒன்று எழுந்தது. இச்சோதியின் அடிமுடியை எவர் முதலில் கண்டு வருகின்றார்களோ, அவரே பெரியவர் என்று பெருமான் அச்சோதியிலிருந்து அசரீரியாய்க் கூறினர். பிரமன் அன்னப்பறவை உருவெடுத்து சோதியின் திருமுடியைக் காண மேலே பறந்து சென்றான். திருமால் வராக உருவெடுத்து பூமியைக் குடைந்து சென்றார். பல்லாண்டுகள் தேடியும் சோதியின் (இறைவனின்) திருவடியினைக் காண இயலாமல் திரும்பி வந்து திருமால் தோல்வியை ஒப்புக் கொண்டார். திருமுடியைக் காணச் சென்ற பிரமன் எதிரில் வந்த தாழம்பூவிடம், தான் திருமுடியைக் கண்டதாகப் பொய் சாட்சி சொல்லுமாறு கேட்க, தாழம்பூ கீழிறங்கி வந்து பிரமன், இறைவனின் திருமுடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தது. அப்போது சோதியிலிருந்து பெருமான் காட்சியளித்து, பொய்சொன்ன பிரமனுக்குப் பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும், தாழம்பூ சிவபூசைக்கு உதவாதென்றும் சாபமிட்டனர். அதன்பின் பிரமனும், திருமாலும் அகந்தை நீங்கிச் சிவபெருமானே உயர்ந்தவர் என்பதை ஒப்புக்கொண்டு, அவ்விடத்து இலிங்க ரூபமாய் எழுந்தருளுதல் வேண்டும் என்று பெருமானிடம் வேண்டினர். அவ்வேண்டுதலுக்கிரங்கிய பெருமான் இலிங்க ரூபமாய் எழுந்தருள் புரிய, அந்த இலிங்கத்தைப் பிரமனும், திருமாலும் பூசித்து வணங்கினர். பெருமான் அக்னி ஸ்தம்பமாய் நின்ற இடம் அருணாசலமாயிற்று. (அருணம், சோணம் – சிவப்பு, நெருப்பு; அசலம் – மலை; அருணாசலம் – செந்நிற மலை) பெருமானும் அருணாசலேசுவரர் எனும் திருப்பெயர் பெற்றார்.

இறைவி இடதுபாகம் பெற்றது

கைலையில் ஒரு சமயம் சிவபெருமானின் கண்களை உமாதேவியார் தனது கைகளால் விளையாட்டாக மூட உலகெலாம் இருண்டது. அதனால் உயிர்களெல்லாம் இன்னலுற்றன. அதற்குக் கழுவாயாகத் தேவியார் கச்சியம்பதியில் மணல் இலிங்கம் ஒன்றினைத் தா பித்துப் பூசை செய் து வரும் வேளையில் பெருமான் தோன்றி, திருவண்ணாமலை சென்று தவமியற்றி தனது இடப் பாகத்தைப் பெறுமாறு அருளிச் செய்தார். அத்திரு வருளின்படி தேவி திருவண்ணா மலையை அடைந்து பவழக்குன்று மலையில் பர்ண சாலை அமைத்து த வ ஞ் செய்து கார்த்திகைத் தீப நாளன்று பெருமானது இடப்பாகத்தைப் பெற்றனள். அவள் இடப்பாகம் பெற்றதை உணர்த்தும்

வண்ணம் கார்த்திகை தீபத்தன்று மாலை வேளையில் இத்திருக் கோயிலின் கொடிமரத்திற்கு முன்பாக அர்த்த நாரீஸ்வரர் எழுந்தருளும் போது மலை உச்சியில் தீபமேற்றப் படுகிறது. இதனை அன்றொருநாள் மட்டுமே தரிசிக்கவியலும். கார்த்திகை தீபச் சிறப்பு

கார்த்திகை மாத முழுநிலவில் வரும் கார்த்திகை தீபம் பற்றி அனைவரும் அறிவர். இவ்விழா சங்க காலத்திலேயே குறிக்கப் பட்டிருக்கிறது. அகநானூறு முதலான நூல்கள் தீப விழாவைச் சிறப்பாகத் தெரிவிக்கின்றன. கார்த்திகை விளக்கிட்டன்ன என்று சீவக சிந்தாமணியும், தலைநாள் விளக்கு என்று கார்நாற்பது எனும் நூ லு ம் செப்புகின்றன . திருஞானசம்பந்தர் மயிலாப்பூரில், பூம் பாவை உயிர் பெற் றெ ழ ப் பாடியபோது, கார்த்திகை விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் என்று தீபவிழாவைக் குறிப்பிட்டதைக் காண்கிறோம். இவ்வாறு மிகப் பழமையும், பெருமையும் உடைய கார்த்திகை தீ ப ம் என்றாலே நினைவுக்கு வ ரு வ து இ த் திருவண்ணாமலைத் தலமே ஆகும். அன்று மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் தொடர்ந்து பல நாள்கள் எரிவதும்நெடுந்தொலைவுக்குக் காட்சி தருவதும் தலச்சிறப்புடைய தாகும்.

கார்த்திகை தீப தரி சனத் தால் இருபத்தொரு தலை முறைக்கு முத்திப்பேறு கிடைக்கும் என்கிறது அருணாசல புராணம்.

தனிச்சிறப்பு கொண்ட சந்நிதிகள்

யானைதிறைகொண்ட விநாயகர் 

ஒருசமயம் அண்டை நாட்டைச் சேர்ந்த முகிலன் எனும் அரச னொருவன் போரில் திருவண்ணா மலையைக் கைப்பற்றி தன து படை வீரர்களுடன் தங் கி யிருக் கையில், அன்றிரவு யானையொன்று அவனை யு ம், அ வன து படை வீரர்களையும் விரட்டியடிப் பதாகக் கனவு கண்டான். இது குறித்து மறுநாள் விசாரித்தபோது, விநாயகப் பெருமானால் பாதுகாக்கப்பட்டு வரும் புனிதத்தலத்தின் மீது தவறுதலாகப் போரிட்டுத் தங்கியிருப்பதை உணர்ந்தான். தன் தவற்றை உணர்ந்த அவன் விநாயகப் பெருமானைப் பணிந்து மன்னித்தருளுமாறு இறைஞ்சி, அவருக்குத் தன்னுடைய யானைகளைக் காணிக்கையாக அளித்து தனது நாட்டிற்குத் திரும்பினான். இந்த வரலாற்றைக் கொண்ட பெருமான் யானை திறைகொண்ட விநாயகர் என்னும் திருப்பெயர் பெற்று தல விநாயகராகக் கிளி கோபுரத்தி னடியில் எழுந்தருளியுள்ளார்.

சந்பந்த விநாயகர்

செந்தூரம் வழக்கமாக அனுமனுக்கு மட்டுமே பூசி அலங்கரிக்கப்படும். ஆனால் இத்திருத்தலத்தில் கொடிமரம் அருகிலுள்ள விநாயகருக்கும் செந்தூரம் பூசி அலங்கரிக் கி ன் ற னர் . இ த ற் கு ப் பின்னணியில் புராண வரலாறு ஒன்றுண்டு. சம்பந்தாசுரன்

என்னும் அசுரனை விநாயகர் வதஞ்செய்து அவனது உதிரத்தைத் தனது திரு மேனியில் ஏற்றுக்கொண்டதால் இவ் விநாயகர் மீது செந்தூரம் பூசி அலங்கரிக்கின்றனர். சித்திரைத் தமிழ் ஆண்டுப்பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஒருநாள் என முக்கிய நாட்களில் மட்டும் செந்தூரம் சாற்றும் வைபவம் நடைபெறுகின்றது. சம்பந்தாசுரனை வதஞ் செய்ததால் இவர் சம்பந்த விநாயகர் என வழங்கப்படுகின்றார்.

அருணகிரிநாதர் வரலாறு

திருவண்ணாமலையில் வாழ்ந்த தலைசிறந்த அடியார் பெருமக்களுள் ஒருவர் அருணகிரியார் ஆவர். இவர் இளமைக்காலத்தில் சிற்றின்பத்தில் உழன்று பின் தனது தவற்றை உணர்ந்தவராய் இத்திருக்கோயிலை அடைந்து வல்லாள மகாராசன் கோபுரத்தின்மீது ஏறிச் சென்று உயிரை விடக் கீழே விழுகையில் அவரைக் குன்றெறிந்த குமரக் கடவுள் தனது இரண்டு கரங்களால் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றி ஆட்கொண்டனர். பின்னர் தனது வேலினால் அருணகிரியாரின் நாவில் ஆறெழுத்து மந்திரத்தை எழுதி, முத்தைத்தரு என்று சொல்லெடுத்துக் கொடுத்துப் பாடும் ஆற்றலை வழங்கியருளிச் செய்தார்.

அதன்பின் அருணகிரிநாதர், எண்தோள் இறைவனின் திருமகன் ஆறிரு தடந்தோள் ஆறுமுகப் பரமனின் அணிமிகு தலங்கள் பலவற்றிற்கும் சென்று திருப்புகழெனும் சந்த கவிமாலை சாற்றியருளினார்.

கம்பத்திளையனார், கோபுரத்திளையனார்

இராசகோபுரத்தில் நுழைந்தவுடன் முருகப்பெருமான் கம்பத்திளையனார் எனும் திருப்பெயரில் காட்சியருளுகின்றார். சம்பந்தாண்டான் எனும் தேவி உபாசகன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படிச் சொல்லி அவரது பக்தியை இகழ்ந்தான். பிரபு தேவராய மன்னனுக்குக் காட்சியருள வேண்டுமென்று அருணகிரியார் முருகப்பெருமானை வேண்டி நிற்க, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு கம்பத்தில் காட்சி தந்தருளினார். அதனால் கம்பத்திளையனார் என்று வழங்கப்படுகின்றார். இங்குள்ள வல்லாள மகாராசா கோபுரத்தின் அடியில் கோபுரத்திளையனார் எனும் பெயரிலும் முருகன் கோயில் கொண்டுள்ளார். அருணகிரியார் அக்கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்றபோது அவரைத் தனது திருக்கரங்களில் தாங்கிக் காப்பாற்றி, திருப்புகழ் பாட அருளியவர் இப்பெருமான்.

கிளிகோபுரம் வரலாறு

விசயநகர மன்னன் பிரபு தேவராயர் என்பவன் ஒரு சமயம் கண்பார்வையிழந்து துன்பமுற்றான். பாரிசாதமலரைக் கொண்டு வந்து சிகிச்சை செய்தால் மீண்டும் கண்பார்வை கிடைக்கும் என்றும், இப்பணியைச் செய்ய வல்லவர் அருணகிரிதான் என்றும் மன்னனின் நம்பிக்கைக்குரிய சம்பந்தாண்டான் கூறினான். மன்னரும் அதனையேற்று அருணகிரியாரை அழைத்து, பாரிசாத மலரைக் கொண்டுவருமாறு பணித்தார்.

அருணகிரியார் கூடுவிட்டுக் கூடு பாயும் திறமையால் ஒரு இறந்த கிளியின் உடலுக்குள் தனது உயிரைப் புகுத்தி, மறைவான ஓரிடத்தில் தனது உடலைக் கிடத்தி, தேவருலகில் இருக்கும் பாரிசாதமலரைக் கொண்டுவரப் பறந்து சென்றார். மலரைக் கொண்டு வருவதற்குள் சம்பந்தாண்டானது சூழ்ச்சியால் அருணகிரியாரின் உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது. பின்னர் பாரிசாத மலரைக் கொண்டுவந்து மன்னனுக்குப் பார்வை வரும்படி செய்த அருணகிரியார், தனது பூதவுடலை மீண்டும் திரும்பப் பெற முடியாததால் கிளியின் வடிவத்திலேயே அங்குள்ள கோபுரத்தின்மீது வாழ்ந்திருந்து கந்தரனுபூதி முதலான பாடல்களை இயற்றினார் என்பர். அதனால் அக்கோபுரத்திற்குக் கிளி கோபுரம் என்று பெயர் வழங்கலாயிற்று.

அண்ணாமலையார் இறந்தோர்க்குத் திதி செய்தல்

அனைத்து நற்குணங்களும் பொருந்திய வல்லாள மகாராசா என்பவரும், அவரது மனைவியும் குழந்தைப் பேறின்றி வருந்தினர். அண்ணாமலையாரைப் பணிந்து குறையிரந்தனர். பெருமான் அத்தம்பதியினருக்குக் குழந்தையாகத் தோன்றினார். இறைவனின் அருளை வியந்து மகிழ்ந்த அவர்கள் குழந்தையைத் தழுவும்போது மறைந்துவிட்டது. மன்னன் தனது மனக்குறையை வெளிப்படுத்தி கண்ணீர் பெருக வேண்டி நிற்கையில், பெருமான் காட்சியளித்து, மன்னனுக்குண்டான கடமைகளைச் சரிவரச் செய்துவருமாறும், அவனுடைய ஈமக்கிரியைகளைத் தானே செய்வதாகவும் வாக்களித்து மறைந்தருளினார். அத்திரு வாக்கின்படி வல்லாள மகாராசா இறந்தபின் ஆண்டுதோறும் அருணாசலேசுவரப் பெருமானே திதி செய்து வருகிறார். அருணாசலேசுவரர் மாசி மகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு எனும் கிராமத்திற்கு எழுந்தருளி அம் மன்னனுக்குச் சம்பிரதாயங்களுடன் திதி கொடுக்கின்றார். இவ்விழா மாசிமக தீர்த்தவாரி எனக் கொண்டாடப்படுகின்றது. –

இறந்தோருக்கு ஆண்டுதோறும் திதி செய்தல் என்பது இந்துக்களின் கடமையாகும். இதனைத் திருவண்ணாமலையில் இறைவனே செய்து நமக்கு வழிகாட்டியருளுகின்றார்.

பைரவர்

இங்கு பிரம தீர்த்தக் கரையில் உள்ள பைரவர் சந்நிதி சிறப்பு வாய்ந்ததாகும். இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்துள்ளனர். எட்டு திருக்கரங்களில் ஆயுதங்களை ஏந்தியும், கபால மாலை தரித்தும் தலையில் பிறை சந்திரன் சூடியும் கம்பீரமாகக் காட்சியருளு கின்றார். அட்டமியன்று சிறப்பு வழிபாடு இங்கு செய்யப்படுகின்றது.

திருக்கோயில் அமைப்பு

கிழக்கு நோக்கியுள்ள இராசகோபுரத்தில் நுழைந்தவுடன் வலதுபுறம் ஆயிரங்கால் மண்டபமுள்ளது. அங்கு இரமண மகரிஷி தியானித்திருந்த பாதாள லிங்கேசுவரரைத் தரிசிக்கலாம். இராசகோபுரத்திற்கு இடதுபுறம் கம்பத்திளையனார் சந்நிதி உள்ளது. இங்கு தான் முருகன், பிரபு தேவராய மன்னனுக்குக் காட்சியளித்தார். இதற்குத் தெற்குப்புறமாக சிவகங்கை தீர்த்தம் அமைந்துள்ளது. இதன் மேல்புறம் சர்வசித்தி விநாயகர் சந்நிதியும் அருகில் பெரிய நந்தியும் உள்ளது. நந்திக்கெதிராகத் தென்படும் கோபுரம் வல்லாள மகாராசன் கோபுரம் எனப்படுகிறது. இதன் முன்பு வலப்புறம் கல்யாண சுந்தரேசுவரர் சந்நிதியும் இடப்புறம் கோபுரத்திளையனார் சந்நிதியும் காணப்படுகின்றன.

வல்லாள மகாராசன் கோபுரத்தைக் கடந்தவுடன் அடுத்து கிளி கோபுரம் அமைந்துள்ளது. இதனடியில் புடைப்புச் சிற்பமாக யானை திறை கொண்ட விநாயகர் காட்சியருளுகின்றார். கோபுரத்தின் உட்புறமாகச் சென்றால் எதிர்ப்படுவது பதினாறுகால் மண்டபம். இம்மண்டபத்தில்தான் கார்த்திகை தீப விழாவன்று மாலை வேளையில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுகின்றனர். அடுத்து பிரகாரத்தின் தென்புறம் தலவிருட்சமாகிய மகிழமரம் உள்ளது. பிரகார வடகிழக்கு திசையில் காளத்தீசுவரர், ஏகாம்பரேசுவர், ஜம்புகேசுவரர், சிதம்பரேசுவரர், பிடாரியம்மன் ஆகிய சந்நிதிகள் உள்ளன.)

பதினாறுகால் மண்டபத்திற்கு முன்பு பலிபீடம், கொடிமரம், நந்திதேவர் ஆகியவற்றைக் கடந்து உள்ளே செல்கையில் காணப்படுகின்ற உட்பிரகாரத்தில் 63 நாயன்மார்களும் உள்ளதைக் காணலாம். உற்சவர் சந்நிதி, வேணுகோபால சுவாமி சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி, சண்முகர் சந்நிதி, வடபுறம் பைரவர் சந்நிதி, பள்ளியறை, நடராஜர் சந்நிதி, ஆகியன உள்ளன. கருவறையில் ஆதியந்தமிலா அருட்பெருஞ் சோதியான அருள்மிகு அருணாசலே சு வரர் இ லிங்கத் திருமேனி கொண்டு காட்சியருளுகின்றார் பிரம்மன், திருமால் கண்டறியா எம்பெருமானின் தரிசனம் பிறவித் துன்பத்தைப் போக்குவதாகும். அவ்வருட்பெருங்கடலைத் தரிசித்துவிட்டு வருகையில் வடக்கு பிரகாரத்தில் அமைந்துள்ள வைகுண்ட வாசல் வழியாக வெளியே வந்து அருள்மிகு அபீதகு சாம்பாள் சந்நிதியை அடையலாம். அடிமுடிகாணா அண்ணலின் தரிசனமும், உண்ணாமுலையம்மனின் தரிசனமும் வாய்க்கப்பெற்றோர் பெரும்பேறுகள் சொல்லிலடங்கா.

விசுவாமித்திரர், அகத்தியர், பதஞ்சலி, வியாக்கரபாதர், துருவாசர் போன்ற முனிவர்கள் வழிபட்ட தனித்தனி சிவலிங்கங்களும் இன்னபிற சந்நிதிகளும் இத்திருக்கோயிலில் காணப்படுகின்றன.

கோபுரங்கள்

தென்னிந்தியாவின் இரண்டாவது உயர்ந்த கோபுரமாக கிழக்கு கோபுரம் உள்ளது. பதினொரு நிலைகளைக் கொண்டுள்ள இதன் உயரம் 217 அடி ஆகும். கிருஷ்ண தேவராய மன்னனால் இக்கோபுரம் அமைக்கப்பெற்றது. கோயிலுக்கு மேற்குப்புறமுள்ள து பேகோபுரம் எனப்படும். தென்புறம் உ ள் ள து தி ரு ம ஞ் ச ன கோபுரம் என்று வழங்கப் படுகிறது. திருமஞ்சனத் திற்கான தீ ர் த் த ம் இக்கோபுரத்தின் வழியாகக் கொண்டு செல்வதால் அப் பெயர் பெற்றது. வடபுற முள்ள கோபுரம் அதனை அமைத்தவர் பெயரால் அம்மணியம்மன் கோபுரம் என்று வ ழங் கப் ப டு கிற து. நாற்புறமும் உயர்ந்தோங் கி ய கோபுரங்களையுடைய இத்திருக்கோயிலில் வல்லாள மகாராச கோபுரம், கிளி கோபுரம் என இன்னபிற கோபுரங்களையும் சேர்த்து 9கோபுரங்கள் உள்ளன.

கலைச்சிறப்பு

கோபுரங்களின் நுழைவாயிலில் உள்ள நடன மங்கையர் சிற்பங்கள் கண்களைக் கவர்கின்றன. விசயநகர மன்னர்கள் ஆடல் கலையைப் போற்றி வளர்த்தமையை அவை நமக்கு உணர்த்துகின்றன.

கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன், இடதுபுறமுள்ள கம்பத்திளையனார் சந்நிதியின் முன் மண்டபத் தூணொன்றில் உள்ள சங்கிலி போன்ற சாளரம் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. அதைக் கண்டுகளித்து அந்த சந்நிதியை வலம் வருகையில் பின்புறமுள்ள 16 கால் மண்டபத்தின் தூணொன்றில் யானையை அடக்கும் சிம்மத்தின் மீது தேவி அமர்ந்துள்ள சிற்பம் சிறப்பாக அமைந்துள்ளது.

அம்மண்டபத்திற்கு வடதிசையில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு தூணும் ஒரு கதை சொல்லும். இவற்றைக் கண்டுகளித்துச் செல்கையில், அடுத்து நந்திதேவரின் பெரிய கற்றிருமேனியுள்ளது. அவர் வீற்றிருக்கும் மண்டபத்திலும் வியப்பிலாழ்த்தும் புராணச் சிற்பங்கள்! அவற்றையெல்லாம் கண்டு வல்லாள மகாராச கோபுரம், கிளி

கோபுரம் ஆகியவற்றைக் கடந்து உள்ளே சென்று செந்தூர விநாயகரின் சந்நிதி யினை அடைய லாம். இச் சந்நிதி முன் புள்ள மண்டபத் தூண்கள் காணக் கிடைக்காத கலைப்பெட்டகங்களாக மிளிர்கின்றன. அவை பாதுகாக்கப்பட வேண்டிய கலைப் பெட்டகங்கள்! தூணில் அமைந்துள்ள சாளரங்களில் நுணுக்க

மான வேலைப் பாடுகளுடன் நடன மங்கையர் சிற்பங்கள் உள்ளமை வியப்பின் எல்லைக்கே நம்மை அழைத்துச் செல்லும்! சாளரங்கள் மட்டுமா பேசுகின்றன? அந்தத் தூணில் நுண்ணிய சிற்பங்களாக அடியார்கள் வரிசையாக உள்ளனர். அதற்கு மேல் சர்பங்கள் வரிசையாக உள்ளன. அதற்கும் மேல் முனிவர்கள் வரிசை, சங்கிலித் தொடர், மீண்டும் அடியார்கள் வரிசை என்ற அமைப்புடன் காணப்படுகின்றது.

பண்டைத் தமிழர் கல்லைக் கலையாக்கி, கலையைக் கோயிலாக்கி, கோயிலைத் திருக்கோயிலாக்கி, நட்ட கல்லைப் பேச வைத்துள்ளனர். அவற்றைக் காப்பது நமது கடமையன்றோ !

அடுத்து ரிஷி கோபுரத்துள் நுழைந்தவுடன் வலதுபுறம் தென்படும் தூ ணி ன் மேல்பகுதியில் யாளிச் சிற்பத்தின் திறந்த வாயிலிருந்து தொங்கும் கற்சங்கிலி தமிழர்களின் சிற்பக் கலைத்திறனுக்கோர் எ டு த் து க் காட்டடாகு ம் . கருவறைக்கு முன்புள்ள மகா மண்டபத்தின் இருபுறங்களிலும் சுமார் 12 அடி உயரமுள்ள துவார பாலகர்கள் மிரள வைக்கும் தோற்றத்துடன் கம் பீர மாக உள் ள னர். அ த ற் க டு த் து உண்ணாமுலையம்மன் சந்நிதி முன்புள்ள மகாமண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் உள்ள தெய்வச் சிற்பங்கள் காண வேண்டிய ஒன்றாகும். எமன் பாசக் கயிற்றை வீசுதல், மார் கண்டேயன் இலிங்கத்தைத் தழுவுதல், பெருமான் தோன்றி எ ம னை உதைத்தல் என அம்மண்டபத்தின் முன்புறமுள்ள தூணொன்றில் புராண வரலாற்றைத் தெரிவிக்கும் சிற்பமுள்ளது கண்டு வணங்க வேண்டிய ஒன்றாகும்.

அடுத்து மகிழ மரத்திற்குப் பின்புறம் பரந்து விரிந்த கல்யாண மண்டபத்தில் பழங்கால ஓவியங்கள் காணப் படுகின்றன. உருளை வடிவத் தூண்கள், சதுரத் தூண்கள் என அனைத்து விதமான தூண்களுடன் அமைந்துள்ள இம்மண்டபம் ஓவியக் கூடமோ எனும் ஐயப்பாட்டை ஏற்படுத்துகின்றது.

இவ்வாறு சிற்பக் கலை, ஓவியக் கலை ஆகிய அனைத்தும் நிறைந்த கலைக் கோயிலாகவும், அண்ணாமலையார் கோயில் திகழ்கின்றது. இதனுள் உள்ள கலைச் சிறப்பை நவில ஒரு நா போதாது. இவற்றையெல்லாம் முழுமையாகக் கண்டுகளிக்க ஒரு நாளும் போதாது. நினைத்தாலே முத்தி தரும் அருணைப்பதி அண்ணலை நேரில் தரி சித்து பண்டைத் தமிழரின் கருவூலங்களான சிற்பங்களையும் கண்டுகளித்து பிறப்பின் பயனை முழுமையாக அடையலாம்.

மகான்களும், சித்தர்களும்

இப் புண்ணிய பூமியில் எண்ணற்ற மகான்களும், சித்தர்களும் வாழ்ந்தார்கள் என்றும், இன்றும் பல சித்தர்கள் வாழ்கின்றனர் என்றும் கூறுவது உண்டு. எனவே இது ஞான பூமி எனக் கூறப்படும். புகழ்பெற்ற இரமண மகரிஷி வாழ்ந்த – தோற்றுவித்த ஆசிரமம் மலைவலப்பாதையில் காட்சியளிப்பதைக் காணலாம். குகை நமசிவாயர், குரு நமசிவாயர், சேஷாத்திரி மகரிஷி, விசிறிச் சாமியார் முதலானோர் வாழ்ந்து பல அற்புதங்கள் நிகழ்த்தியதலம் இத்தலம்.

அண்ணாமலையாரின் கிரிவலம்

அருள் மிகு அருணாசலேசுவரர், உண்ணா முலை யம்மையுடன் தீபத்திருவிழாவிலும், தை மாட்டுப் பொங்கல் நாளிலும் மலை வலம் கண்டருளுகின்றார். இறைவனே செய்யும் இந்த கிரிவலத்திற்கு வாழ்வில் ஒருமுறையேனும் நாமும் சென்று பயன்பெறுதல் வேண்டும். எண்ணிலா முனிவர்கள், சித்தர்கள், பக்தகோடிகள் கிரிவலம் வந்து பயன்பெற்றுள்ளனர். கிருதயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல்மலையாகவும் சுமார் 2668 அடி உயரத்துடன் காட்சியளிக்கும்

இ ம் மலை யினை மாதந்தோறும் பெளர்ண மி யன்று இலட்சக்கணக்கில் பக்தர்கள் வலம் வந்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய சிறப்பாகும். முழு நிலவொளியில் மூலிகைக் காற்றின் வாசத்தை நுகர்ந்து சுமார் 14 கி.மீ. தூரம் கிரிவலம் வருவது மனத்திற்கும், உடலுக்கும் நன்மை பயப்பதாகும் என்பது விஞ்ஞானபூர்வ உண்மையாகும். எண்ணிறந்த தீர்த்தங்களும் மலைசுற்றும் பாதையில் உள்ளன.

அஷ்டலிங்கங்கள்

இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்போர் எட்டு திசைகளுக்கும் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர். அஷ்டதிக்கு பாலகர்கள் என வழங்கப்படும் இவர்கள் அருணாசலேசரைப் பணிந்து கிரிவலம் வந்து தங்கள் பெயரால் இலிங்கங்களைப் பிரதிட்டை செய்து பூசித்தனர். அவை, இந்திரலிங்கம், அக்னிலிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம் என்ற பெயர்கள் கொண்டு தனித்தனி கோயில்களாக மலையைச் சுற்றி அமைந்துள்ளன.

திருமுறைத்தலம்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், முதலிய பெருமக்கள் அண்ணாமலையாரைப் பணிந்து திருப்பாடல்கள் அருளிச்செய்துள்ளனர்.

திருஞானசம்பந்தர் அறையநல்லூரை அடைந்து பரமனைப் பணிந்து பதிகமாலைச் சாற்றி அக்கோயிலை வலம் வருகையில், அடியார்கள் அண்ணாமலையைக் காட்டிட, பிள்ளையாரும், அண்ணாமலையை அடைந்து பெருமானைப் பாடிப் பரவினார். அண்ணாமலையைத் தொழுவாரது வினைகள் அற்று வீழும் என்றருளிச்செய்தார்.

உண்ணாமுலை உமையாளொடும்

உடனாகிய ஒருவன்

பெண்ணாகிய பெருமான்மலை

திருமாமணி திகழ

மண்ணார்ந்தன அருவித்திரள்

மழலைம் முழவு அதிரும்

அண்ணாமலை தொழுவார்வினை

வழுவாவண்ணம் அறுமே. (திருஞானசம்பந்தர்)

திருநாவுக்கரசு பெருமானும் அண்ணாமலையாரைத் தொழுதால் வினைகள் கெட்டொழியும் என்றருளியுள்ளார்

பட்டி ஏறுகந்து ஏறிப் பலஇல்) லம்

இட்ட மாக இரந்துண்டு உழிதரும்

அட்ட மூர்த்தி யண்ணாமலை கைதொழக்

கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே. (திருநாவுக்கரசர்)

மாணிக்கவாசகப் பெருமான் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து திருவெம்பாவை அருளிச் செய்தார். கிரிவலப்பாதையில் அடி யண்ணாமலை எனுமிடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதைக் காணலாம்.

அடியார் பெருமக்கள் பாடிப் பரவிய அருணைப் பதியானது நினைத்தாலே வீடுபேற்றையளிக்கும் தலமாகும். இதனை நேரில் தரிசிப்போர் பெரும்பேறுகளைச் சொல்லவுமெளிதோ!

சேக்கிழார் பார்வையில் திருவண்ணாமலை

சீரின் மன்னிய பதிகமுன் பாடிஅத் திருஅறை யணிநல்லூர்

வாரின் மல்கிய கொங்கையான் பங்கர்தம் மலைமிசை வலங்கொள்வார்

பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாடொறும் பணிந்தேத்தும்

காரின் மல்கிய சோலைஅண் ணாமலை அன்பர்காட் டிடக்கண்டார்

(பெ.புரா.969)

திருஞானசம்பந்தர் அறையணிநல்லூரை அடைந்து பெருமானைப் பணிந்தேத்திப் பின் அம்மலையினை வலம் வருகையில் அடியார்கள் காட்டிட அண்ணாமலையைக் கண்டார். அம்மலையின் திருக்காட்சியானது, தேவர்களுக்கு இறைவனாக விளங்கும் சிவபெருமானின் வடிவுபோன்று ஞானசம்பந்தருக்குத் தோற்றமளித்தது என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா மலைஅங் கமரர்பிரான் வடிவுபோன்று தோன்றுதலும்

(பெ.புரா.970)

தேவர்களுக்கெல்லாம் இறைவனாகிய அந்த ஆதிதேவர் வீற்றிருக்கும் திருவண்ணாமலையினை வாகீசர் அடைந்து பண் நிறைந்த தமிழ்ப்பதிகங்களைச் சாற்றி வழிபட்டு உழவாரப்பணி செய்து வந்தார். இதனை அருண்மொழித்தேவர் இன்தமிழால் இயம்புகின்றார்.

அண்ணா மலைமேல் அணிமலையை ஆரா அன்பின் அடியவர்தங்

கண்ணார் அமுதை விண்ணோரைக் காக்கக் கடலில் வந்தெழுந்த

உண்ணா நஞ்சம் உண்டானைக் கும்பிட் டுருகுஞ் சிந்தையுடன்

பண்ணார் பதிகத் தமிழ்பாடிப் பணிந்து பரவிப் பணி செய்தார்.

– (பெ.புரா.313)

உழவாரப் பணியே சிவத் தொண்டாகக் கருதி பல தலங்களில் பணி செய்த திருநாவுக்கரசர் திருவண்ணாமலையிலும் தங்கி அப்பணியினைத் தொடர்ந்ததைப் பெரிய புராணம் வாயிலாக நாம் அறிகின்றோம்.

இலக்கிய சிறப்பு

இத்தலத்தின் வரலாற்றைக் கூறும் அருணாசல புராணம், அருணைக் கலம்பகம் ஆகிய நூல்களைச் சைவ எல்லப்ப நாவலர் என்பவர் பாடியுள்ளார். குமரகுருபர

சுவாமிகள் இயற்றிய சோன சைலமாலை என்பது ஒரு சிறந்த பாராயண நூல் ஆகும். புகழ்பெற்ற முருக பக்தராகிய அருணகிரியார் வாழ்ந்து பல விந்தைகள் புரிந்ததும் திருப்புகழ் பாடல்கள் கொண்டதும் இத்தலமாகும்.

நமச்சிவாய சுவாமிகள் – சாரபிரபந்தம்

திருச்சிற்றம்பல நாவலர் பல்லாவரம் சோணசல் – அண்ணாமலையார் சதகம்

பாரதியார் – அண்ணாமலை கார்த்திகை தீபவெண்பா, சோணாசலவெண்பா, திருவருணைக் கலிவெண்பா,சோணாசல சதகம்

இராமலிங்க சுவாமிகள்- திருவண்ணாமலை திருவருட்பதிகம்

புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் -அருணாசலேசுவரர் பதிகம்

காஞ்சிபுரம் சபாபதி முதலியார் யாழ்பாணம் நல்லூர் – அருணாசல பதிகம்

தியாகராஜபிள்ளை – அண்ணாமலையார் வண்ணம்

இவையன்றி மேலும் நூல்கள் பல உள்ளன.

பூசைகள்

இத்திருக்கோயிலில் காமிக ஆகமப்படி நாள்தோறும் ஆறுகால பூசைகள் செய்யப்படுகின்றன. அதிகாலை 5 மணி ய ள வில் கோயில் திறக் க ப் ப ட் டு கோ பூசை செய்யப்படுகின்றது.

காலை 5.30 மணி – உஷக்கால பூசை

காலை 8.00 மணி –  காலசந்தி பூசை

முற்பகல் 11.30 மணி –  உச்சிகால பூசை

மாலை 5.30 மணி – சாயரட்சை பூசை

இரவு 7.30 மணி – இரண்டாம் கால பூசை

இரவு 9.00 மணி – அர்த்தசாம பூசை

இவையன்றி பஞ்சபருவ பூசைகளும் நடைபெறுகின்றன.

திருவிழாக்கள்

இத்தலத்தில் மாதந்தோறும் திருவிழாக்கள் மரபுவழியிலும், புராண நிகழ்வுகளை அடியொற்றியும் கொண்டாடப்படுகின்றன.

சித்திரை – தமிழ்ப்புத்தாண்டு, வசந்தோற்சவம் 10 நாட்கள்

வைகாசி – வைகாசி விசாகம்

ஆனி – ஆனித்திருமஞ்சனம், ஆனி பிரம்மோற்சவம் 10 நாட்கள்

ஆடி – ஆடிப்பூரம், அம்பாளுக்கு 10 நாட்கள் உற்சவம்

ஆவணி – பிட்டுக்கு மண் சுமந்தது

புரட்டாசி – நவராத்திரி, அம்பாளுக்கு 10 நாட்கள் உற்சவம்

ஐப்பசி – அன்னாபிசேகம், கந்தசஷ்டி 6 நாட்கள்

கார்த்திகை – கார்த்திகை தீபம் 17 நாட்கள் உற்சவம்

மார்கழி – ஆருத்ரா, மாணிக்கவாசகர் உற்சவம்

தை – உத்ராயன உற்சவம் 10 நாட்கள், திருவூடல் உற்சவம்

மாசி – மகாசிவராத்திரி, மாசிமக தீர்த்தவாரி

பங்குனி – பங்குனி உத்திர உற்சவம்

கல்வெட்டுக்கள்

மிகப்பழமையான இத்திருக்கோயிலில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் போன்ற மொழி கல்வெட்டுக்கள் நூற்றுக்கும் மேற்பட்டு உள்ளன. காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் கோயிலின் அர்த்தசாம பூசைக்கு ஒருலட்சம் வராகன் பொன் அளித்த கல்வெட்டும் இத்திருக்கோயிலில் உள்ளது.

இங்கே கொடுக்கப்பட்ட செய்திகள் மிகமிகச் சிறிய அளவே ஆகும். மேலும் பல விவரங்களை இத்தலத்துடன் தொடர்புடைய அருள் நூல்களைக் கற்று அன்பர்கள் அறிந்துகொள்ளலாம்.

தரிசன நேரம்

அதிகாலை5.00 மணி முதல் 12.30

மணிவரை மாலை 3.30 மணி முதல் 9.30 மணி வரை

சனி, ஞாயிறு, பெளர்ணமி நாட்களில் நாள் முழுவதும் தரிசனம் உண்டு .

தொடர்பு முகவரி

இணை ஆணையர் / செயல் அலுவலர்

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்

திருவண்ணாமலை – 606 601.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *