ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோவில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. இக்கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது.

மூலவர்: ஆண்டளக்கும் ஐயன் – இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தரும் பெருமாள் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் என அழைக்கப்படுகிறார். கருவறையில் பெருமான், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், தமது நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா மேல் எழ, பள்ளி கொண்ட தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து இடதுகையில் எழுத்தாணியும் ஏடும் கொண்டுள்ளதால் பெருமாளின் இத்தோற்றம் உலகுக்குப் படியளந்த பெருமாள் ஓய்வாகப் பள்ளிகொண்ட கோலம் என அழைக்கப்படுகிறது.
உற்சவர்: ஸ்ரீரங்கநாதர்
அம்மன்/தாயார்: அரங்க நாயகி – இக்கோவிலில் அரங்கனின் நாயகி, தாயார் பார்கவியாக எழுந்தருளியுள்ளார்.
தல விருட்சம்: புன்னை, பாடலி மரம்
தீர்த்தம்: சூரியபுஷ்கரணி, தாமரைத் தடாகம்
ஆகமம்/பூஜை: பாஞ்சராத்ரம்
பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்: திருமங்கை ஆழ்வார்
ஊர்: ஆதனூர்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா

மங்களாசாசனம் பாடியவர்கள்

இடரான வாக்கை யிருக்க முயலார் மடவார் மயக்கின் மயங்கார் -கடவுளர்க்கு நாதனூ ராதரியார் நானெனதென்னார மலன் ஆதனூர் எந்தை யடியார். ~ திருமங்கையாழ்வார்

தல வரலாறு

பாற்கடலில் சயனித்திருந்த பெருமாளைத் தரிசிக்க வந்த பிருகு முனிவருக்கு மகாலட்சுமி மாலை ஒன்றைத் தருகிறார். பிருகு முனிவர் அம்மாலையை இந்திரனுக்குத் தர அவனோ அதை தனது யானை ஐராவதித்தின் மீது வைக்க யானை அம்மாலையைத் தூக்கி வீசியெறிந்து விடுகிறது. பிருகு முனிவர் கோபங்கொண்டு இந்திரனை பூமியில் மானுடனாகப் பிறப்பான் எனச் சபித்து விடுகிறார். பின் அவரது ஆலோசனைப்படி, தனது சாபம் நீங்க மகாலட்சுமியை இந்திரன் வேண்ட, பூலோகத்தில் பிருகு முனிவரின் மகளாகத் தான் அவதரிக்கப் போவதாகவும், அந்த அவதாரத்தில் பெருமாளுடன் தனக்கு நடைக்கும் திருமணத்தைக் காணும்போது இந்திரனின் சாபம் நீங்கும் எனவும் மகாலட்சுமி கூறுகிறாள். பிருகு முனிவரின் மகளாக பிறந்து வளர்ந்த மகாலட்சுமியின் திருமணக் கோலத்தை இத்தலத்தில் காணும் இந்திரன் சாபம் நீங்கப்பெற்றான் என மரபுவழி வரலாறு கூறுகிறது.

பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையை தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்தார். தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண் டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி “தான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளை திருமணம் செய்யும்போது சாபம் நீங்கப்பெறும்’ என்றார். அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளை திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார்.

தலபெருமை

*ஏடு, எழுத்தாணி பெருமாள்:* திருமங்கையாழ்வார் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலை திருப்பணி செய்தபோது அவர் வைத்திருந்த பணம் அனைத்தும் செலவாகிவிட்டது. பணியாளர் களுக்கு கூலி கொடுக்கக்கூட அவரிடம் பணமில்லை. எனவே, தனக்கு பணஉதவி செய்யும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு அசரீரியாக ஒலித்த பெருமாள், கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அங்கு வந்தால் பணம் தருவதாக சொன்னார். திருமங்கையாழ் வாரும் அங்கு சென்றார். அப்போது வணிகர் ஒருவர் தலைப்பாகை அணிந்து கொண்டு, கையில் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார். அவர் திருமங்கையாழ்வாரிடம், “உங்களுக்கு உதவி செய்ய ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான். என்ன வேண்டுமென கேளுங்கள்’ என்றார். திருமங்கை அவரிடம் பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லிய வணிகர் தான் வைத்திருந்த மரக்காலைக் காட்டி “”இம்மரக்கால் கேட்டதைத் கொடுக்கக்கூடியது. ரங்கநாதனை வேண்டி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக்கேட்டால் இம்மரக்கால் கொடுக்கும்” என்றார். திருமங்கையாழ்வார் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றார். அப்போது வணிகர், “மரக்காலில் தான் பணியாளர்களுக்கு மணலை அளந்து தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் அம்மணல் பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு அது மணலாகவுமே இருக்கும்’ என்றார்.திருமங்கையாழ்வாரும் சரியென ஒப்புக்கொள்ள நிறைய பேருக்கு மணலாகவே இருந்தது. கோபம்கொண்ட பணியாளர்கள் வந்திருப்பவன் தந்திரக்காரன் என எண்ணி அவரை அடிக்க பாய்ந்தனர். வணிகர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். திருமங்கையாழ்வார் அவரை பின் தொடர்ந்து ஓடினார். நீண்ட தூரம் ஓடி வந்த வணிகர் இத்தலத்தில் நின்றார். அவரிடம் திருமங்கையாழ்வார் “நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?’ என்றார். மகாவிஷ்ணு, வணிகனாக வந்து அருளியது தானே என உணர்த்தி அவருக்கு காட்சியளித்தார். ஏட்டில், எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார்.

படியளக்கும் சுவாமி: கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கிறார். இவர் மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி, ஏடுடன் காட்சி தருகிறார். இதனை உலகுக்கு படியளந்த பெருமாள் ஓய்வாக பள்ளிகொண்டிருக்கும் கோலம் எனவும் சொல்கிறார்கள். காமதேனு சுவாமியின் பாதத்திற்கு அருகில் அவரை வணங்கியபடி இருக்கிறாள். சிவன், பிரம்மாவின் ஒரு தலையை எடுக்க அந்த தலை அவரது கையுடனே ஒட்டிக்கொண்டது. சிவனால் தலையை தனியே எடுக்க முடியவில்லை. எனவே அந்த தலையை எரிக்கும்படி அக்னிபகவானிடம் கேட்டுக் கொண்டார் சிவன். அக்னி எவ்வளவோ முயன்றும் அவராலும் தலையை எரிக்க முடியாமல் போனதோடு பிரம்மஹத்தி தோஷமும் பிடித்துக்கொண்டது. அவர் இங்கு பெருமாளை வணங்கி சாபம் நீங்கப்பெற்றார். இவர் கருவறையில் சுவாமியின் பாதத்திற்கு அருகில் இருக்கிறார். அருகில் பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோரும் இருக்கின்றனர்.

மோட்சம் தரும் தூண்கள்: பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதேபோல் இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் சுவாமியின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் இருக்கிறது. இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும்,திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங் கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. 108 திவ்யதேசங்களில் இங்கும், ஸ்ரீரங்கத்திலும் இந்த தூண்கள் இருக்கிறது.

கணக்கு எழுதும் பெருமாள்: சுவாமிமலை அருகே திருஆதனூர் எனும் ஊரில் கோயில் கொண்டுள்ள பெருமாள் கையில் ஏட்டுச்சுவடி, எழுத்தாணியுடன் காணப்படுகிறார். இவர் கணக்கு எழுதும் பெருமாள், ஆண்டளக்கும் ஐயன், படியளக்கும் பரந்தாமன் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

தல சிறப்பு

திருவரங்கத்தில் அரங்கநாதருக்குத் திருமதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த திருமங்கையாழ்வாருக்குப் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அவர் பெருமாளை வேண்ட பெருமாள் அவர் கனவில் தோன்றி கொள்ளிடக்கரையில் வந்து பணம் வாங்கிக்கொள்ளும்படிக் கூறினார். திருமங்கையாழ்வாரும் அவ்விதமே கொள்ளிடக்கரைக்குச் செல்ல அங்கு தலைப்பாகையுடன் இருந்த ஒரு வணிகரைச் சந்தித்தார். அவ்வணிகரிடம் ஒரு காலி மரக்கால், ஏடு, எழுத்தாணி இருந்தது. அவர் ஆழ்வாரிடம் அரங்கநாதன் அவருக்கு உதவ தன்னை அனுப்பியிருப்பதாகக் கூறி, பணியாளர்களுக்கு கூலியாக அக்காலி மரக்காலால் மணலை அளந்து கொடுத்தால், உண்மையாக உழைத்தவர்களுக்கு அது பொன்னாகவும் உழைக்காமல் ஏமாற்றியவர்களுக்கு மணலாகவும் தோன்றும் என்றார்.

அவ்விதமே கூலியாக மரக்காலால் மணலை அளந்து கொடுத்தபோது பெரும்பான்மையோருக்கு அது மணலாகவும் சிலருக்குப் பொன்னாகவும் இருந்தது. மணலைப் பெற்றவர்களை வணிகரை அடிக்க வர வணிகரோ ஓடினார். ஆழ்வாரும் அவர் பின்னே ஓடினார். வணிகர் இத்தலத்தில் வந்து நின்று வணிகராக வந்தது தானே என்று உணர்த்தி எழுத்தாணியால் ஏட்டில் எழுதி ஆழ்வாருக்கு உபதேசித்தருளினார்.

இதனைக் குறிக்கும் விதமாக இத்தலப் பெருமாள் மரக்காலை தலைக்குக்கீழ் வைத்து ஏடு, எழுத்தாணியைக் கையில் கொண்டவாறு பள்ளிகொண்ட கோலத்தில் உள்ளார். இலங்கைக்கு செல்லும் போது ஸ்ரீராமரும் ஆஞ்சநேயரும் இங்கு வந்து தங்கிசென்ற இடம்.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 11 வது திவ்ய தேசம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

பெயர்க் காரணம்

இத்தலத்தில் மகாவிஷ்ணுவை நோக்கி காமதேனு தவம் இருந்த்ததுதான் ஆதனூர் என்ற பெயர் வரக் காரணம் எனக் கூறப்படுகிறது.

காமதேனு -ஆ;
ஆதனூர் -ஆ/தன்/ஊர்

3 நிலை ராஜகோபுரத்தையுடைய இக்கோவிலில் காமதேனுவுக்கும் காமதேனுவின் மகள் நந்தினிக்கும் பெருமாளின் சந்நிதியில் சிற்பங்கள் உள்ளன.

மோட்சத் தூண்கள்

பரமபதத்தில் மகாவிஷ்ணுக்கு முன்பாக இரு தூண்கள் இருக்கும். மனித உடலிலிருந்து விடுபடும் ஆன்மா இவ்விரு தூண்களையும் தழுவ மோட்சம் பெறும் என்பது ஐதீகம். இதே போன்ற இரு தூண்கள் இத்தலத்தில் கருவறைக்கு எதிரில் உள்ள அர்த்தமண்டபத்தில் பெருமாளின் பாதம் மற்றும் தலைக்கு எதிரில் உள்ளன.

இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து இத்தூண்களைப் பற்றிக்கொண்டு பெருமாளின் பாதத்தையும் திருமுகத்தையும் தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் திருமணமாகதவர்களுக்கு திருமணம் ஆகும் என்ற நம்பிக்கையும் வழக்கத்தில் உள்ளது.

மங்களாசாசனம்

இத்தலத்திற்கெனத் தனிப்பாசுரம் இல்லை. திருமங்கையாழ்வார் பெரிய திருமடலில் ”ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்” என்று ஒரு வரியில் குறிப்பிடுகிறார்.

முன்னவனை – மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை …

என ஆண்டளக்கும் ஐயனை திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார்.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *