✨✨✨✨✨✨✨✨
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்”
✨✨✨✨✨✨✨✨
எம்பெருமான் எறிபத்தநாயனாரின் பூக்குடலை திருவிழா-06.10.19- ஞாயிற்றுக்கிழமை
🍃🌷கரூர் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில்🌷🍃 (விழா நிகழ்வு இணைக்கப்பட்டுள்ளது)
✨✨✨✨✨✨✨✨
Yeripathanayanar Pookudalai Festival on 06.10.19 Sunday @🍃🌷Karur Sri Kalayanapasupatheeswarar Temple 🌷🍃-festival invitation attached
✨✨✨✨✨✨✨✨
மழைவளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க
அழலவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்தபோது
முழையரி என்னத் தோன்றி முரண்கெட எறிந்து தீர்க்கும்
பழமறை பரசும் தூய பரசுமுன் எடுக்கப் பெற்றார்-பெரியபுராணம்.

பாடல் விளக்கம்:
மழையினால் செழிப்புற்று ஓங்கும் நிலவுலகின்கண், எவ்விடத்தும் நிலைபெற்ற சைவசமயநெறி தழைத்து ஓங்கத் தீப்போல் ஒளிர்கின்ற சடைமுடியையுடைய சிவபெருமானின் அடியவர்களுக்கு, நேரத்தகாத தீங்குகள் நேர்ந்த பொழுது, மலையிடத்து இருக்கும் குகையில் வாழும் சிங்க ஏறு போல வெளிப்பட்டு, அத்துன்பம் செய்தாரது வலிமை அழியுமாறு அவர்களை அழித்து, அத்துன்பத்தினின்றும் நீக்கும் பழமையான மறைகளும் போற்றுதற்குரிய தூய்மையான மழுப்படையைத் தம்முடைய திருக்கரத்தில் தாங்கப் பெற்றவர்.

Share: