வளர்பிறை அஷ்டமி

உங்களுடைய அனைத்து  கோரிக்கைகளும் வளர்பிறை அஷ்டமி வழிபாட்டிலேயே கிடைத்துவிடும் வளர்பிறை அஷ்டமியைப் பொறுத்தவரையில் தொடர்ந்து ஆறு வளர்பிறை அஷ்டமிகளுக்கு மட்டும் பைரவ வழிபாடு செய்தால் போதுமானது.நமது நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாகத் தீர்ந்துவிடும்.வளர்பிறை அஷ்டமி திதி அமைந்திருக்கும் ஒரு நாளில் எந்த நேரத்திலும் பைரவ வழிபாடு செய்யலாம்.12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் …

ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம். உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்றுவருவது மிகவும் நன்மை தருவதாகும்.   ஆண்டாள் அவதரித்த நாள் : ✳ ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில், ஒரு துளசிச் செடியின் அடியில், கலியுகம் பிறந்து 98வதாக வந்த …

ஆடி அம்மாவாசை

நமது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களில் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் பித்ருக்களாவர். அவர்கள் ஒளி பொருந்திய சூட்சும தேகமுடையவர்கள். அவர்களை எப்போது வழிபடவேண்டும் என பார்ப்போம்.சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற காலம் அமாவாசை என்றும், சூரியனை பிதுர் காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் அழைககப்படுகிறது. எனவே சூரியனும், சந்திரனும் நமது முன்னோர்களின் வழிபாடு தெய்வங்களாகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், இரண்டு மாதங்களில் வரும் ஆதாவது ஆடி, தை அமாவாசைகள் …

ஆடிக் கிருத்திகை

முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த ஆடி கிருத்திகை விழா கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம் ஆகும். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். …