குலதெய்வ வழிபாட்டின் அவசியம் அறிவோம்

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன ..? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது ..? நமது குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தி அளவிடமுடியாதது …

தை அம்மாவாசை

மனிதப் பிறவி மகத்துவம் மிக்கது. மனிதன் வாழ்ந்த காலத்தில் செய்த பாவ புண்ணியங்கள், அவனது அடுத்த பிறவியிலும் தொடரும் என்கிறது இந்துமதம். ஓடியிட்ட பிச்சையும், உவந்து செய்த தானமும், சாடியிட்ட குதிரை போல் தர்மமும் துணையாய் நிற்கும் என்கிறது ஒரு சித்தர் பாடல். மனிதன் இறந்ததும் அவன் கூடவே செல்வது, அவன் செய்த தானமும் தர்மமும்தான் என்பது இதன் பொருள். பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். …

கர்மவினை

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானமளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். குறிப்பாக பிராமணர்களுக்குஅன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன்!! ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான்.அவன் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது!! மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த …

தைப்பூசம்

வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். …

தமிழ் மாதங்களின் வரலாறு

சூரியன் செல்லும் ஆகாயப்பாதையை சமமாக 30 பாகைகள் கொண்ட 12 பாகங்களாகப்பிரித்து அவற்றிற்கு இராசிகள் என்று பெயரிட்டுள்ளோம். ஆரம்பமாக 0 பாகையைக்கொண்டு மேடம், இடபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், தனு, மகரம், கும்பம், மீனம் என்று பன்னிரண்டு இராசிகளும் தொடர்ந்து 360 பாகையுள்ள நீள்வட்டமாக முடியும் இடத்தில் மீண்டும் மேட இராசி தொடங்கும். ஒரு இராசியில் சூரியன் சஞ்சரிக்கும் கால அளவை ஒரு தமிழ் மாதம் ஆகும். …

விவேகானந்தரின் பொன்மொழிகள்

1. உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.   2. கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்   3. உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி …

யார் குரு ?

நம்மிடம் நான்கு மனேபாவங்கள் உள்ளன. 
ஒன்று நம்மைப்பற்றி நாம் பிறரிடம் கூறுவது.
இரண்டு நம்மைப் பற்றி நாம் வெளியில் மறைப்பது
மூன்று நம்மைப்பற்றி பிறர் அறிந்தது.
நான்காவது நம்மைப் பற்றி நமக்கே தெரியாதது இந்த நான்காவது மனோபாவத்தை அறிந்து திறப்பவர் தான் குரு. குரு என்ற வார்த்தையில் ” கு” என்றால் இருளைப் போக்குவது . “ரு” என்றால் ஒளியைத்தருவது. குருவைத்தமிழில் ஆசிரியர் என்போம். ஆசு என்றால் குற்றம் ; இரியர் என்றால் இல்லாதவர்; …

திருநீறு

திருநீறு எவ்வளவு இந்த உயிருக்கு பயன்படுகிறது என்பது பற்றிப் பார்ப்போம்சைவத் திருவேடங்களில் திருநீறு உருத்திராக்கம் சடாமுடி ஆகியன இம்மூன்றும் மிகவும் உன்னதமாக போற்றப்படுகின்றன இறைவனே திருநீற்றினை மேனி( உடல் முழுவதும்) முழுவதும் பூசி விரும்பி அணிந்துள்ள குறிப்புகள் புராணங்களிலும் உபநிடதங்களிலும் ஆகமங்களிலும் திருமுறைகளிலும் நிறைந்துள்ளனதிருநீற்றின் ஆற்றலால் திருஞானசம்பந்தர் சமணர்களை வாதில் வென்றது வரலாற்றுச் சான்றக உள்ளது அடியார் பெருமக்கள் திருநீற்றினை இறைவன் அருளிய பெரும் செல்வமாக ( சொத்தாக) போற்றி …

ஆன்ம தரிசனம்

மனித குலத்தில் மூன்று வகையான பிறப்புகள் இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது 1. புண்ணிய பிறவி 2. பாவப்பிறவி 3.ஞானியர் பிறவி அவரவர் இயல்பில் அவரவர் வாழ்கிறார்கள். ஒரு பாவி பாவம் செய்வதன் மூலம் நல்வாழ்வும், புண்ணியவான் புண்ணியம் செய்வதன் மூலம் நல்வாழ்வும் வாழ்கிறான். இதில் செயலின் விளைவு என்று பார்க்கும்போது பாவப் பிறவியாளர்கள் செய்கிற பாவத்தால் இப்பிறவியில் நலம் கிடைத்தாலும் மறுபிறவியில் உழைப்பவர்களாகவும் ஆன்மஅறிவு, பொதுஅறிவு இல்லாத அல்லது அறிவார்ந்த …

கார்த்திகை தீபத் திருநாள்

கார்த்திகை தீபப் பெருநாள் அன்றுதான் திருவண்ணாமலை திருத்தலத்தில் இறைவன் இறைவிக்கு இடப்பாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆகக் காட்சி அளித்தான். அந்த நன்னாளில் மலைவலம் வருவது மகத்தான புண்ணியத்தைத் தரும். குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலம் அனைத்துப் பாவங்களையும் போக்கி மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது. கிரிவலம் பற்றிய தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போம் ! மலையின் பெருமை :- இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் …